2வது கணவருடன் விவாகரத்தா? சிறுத்தை சிவா தம்பியின் மாஜி மனைவி பண்ண வேலை.. ஷாக்கான திரையுலகம்!
திருவனந்தபுரம்: சூர்யாவின் கங்குவா படத்தை இயக்கி வரும் சிறுத்தை சிவாவின் தம்பி பாலா சமீபத்தில் தான் மரண படுக்கையில் இருந்து மீண்டு வந்திருந்தார். அவரது முன்னாள் மனைவியான பாடகி அம்ருதா சுரேஷ் இசையமைப்பாளர் கோபி சுந்தரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
கடந்த ஆண்டு அம்ருதா சுரேஷ் மற்றும் கோபி சுந்தர் திருமணம் செய்துக் கொண்ட நிலையில், கடந்த மே மாதம் முதலாம் ஆண்டு திருமண நாளை இருவரும் கோலாகலமாக கொண்டாடினர்.
இந்நிலையில், திடீரென அவர்கள் இருவரும் ரொமான்ஸ் செய்த போட்டோக்களை எல்லாம் சோஷியல் மீடியாவில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ள நிலையில், விவாகரத்து சர்ச்சை வெடித்துள்ளது.

பாலாவின் முன்னாள் மனைவி: தமிழில் அன்பு, வீரம், தம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள நடிகர் பாலா இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் பட வாய்ப்புகள் கிடைக்க, அங்கே பல படங்களில் நடித்து வந்த பாலா கடந்த 2010ம் ஆண்டு ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருந்த போது பாடகி அம்ருதா சுரேஷ் உடன் ஏற்பட்ட காதல் காரணமாக அவரை திருமணம் செய்துக் கொண்டார்.
அவர்களுக்கு 2012ம் ஆண்டு பெண் குழந்தை பிறக்க அவந்திகா என பெயர் வைத்து வளர்த்து வந்தனர். ஆனால், திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். கடந்த 2019ம் ஆண்டு சட்டப்படி இருவருக்கும் விவாகரத்து கிடைத்தது. நடிகர் பாலா எலிசபெத் எனும் டாக்டரை திருமணம் செய்துக் கொண்டார்.
2வது முறையும் விவாகரத்தா?: பாடகி அம்ருதா சுரேஷ் இசையமைப்பாளர் கோபி சுந்தருடன் நெருக்கமாக பழகி வந்த நிலையில், இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். கடந்த மே மாதம் தங்களது முதலாம் ஆண்டு ஆனிவர்ஸரியும் இருவரும் கொண்டாடினர்.
இந்நிலையில், இருவருக்கும் இடையே முட்டிக் கொண்டதாகவும் சண்டை வெடித்ததாகவும் சர்ச்சைகள் கிளம்பி உள்ளன. அதற்கு காரணமே சோஷியல் மீடியாவில் இருந்து கோபி சுந்தரின் போட்டோக்களை பாடகி அம்ருதா சுரேஷ் அதிரடியாக நீக்கியது தான் காரணம் என்கின்றனர். ஆனால், இதுவரை விவாகரத்து பஞ்சாயத்து விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இருவரும் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











