"இவரும் நடிக்கிறாராம்ல..." விக்ரமின் 58-ல், ’ஹேர்ஸ்டைல்’ பஞ்சாயத்தில் சிக்கிய ஹீரோ!
விக்ரமின் 58வது படத்தில் மலையாள ஹீரோ ஷேன் நிகாமும் நடிக்கவுள்ளார்.
Recommended Video
சென்னை: ஹேர் ஸ்டைல் பஞ்சாயத்தில் சிக்கிய மலையாள ஹீரோ ஷேன் நிகம், விக்ரமின் 58 வது படத்தில் நடிக்க இருக்கிறார்.
மலையாள சினிமாவின் இளம் ஹீரோ ஷேன் நிகம். 'இஷ்க்', 'கும்பளங்கி நைட்ஸ்' உட்பட சில படங்களில் நடித்துள்ள ஷேன், வெயில், குர்பானி ஆகிய படங்களில் நடித்து வந்தார்.
'வெயில்' படத்துக்கு தலைமுடியை அதிகமாக வளர்க்க வேண்டும் என்பது ஒப்பந்தம். படப்பிடிப்பு முடியும் வரை அதை வெட்டக் கூடாது. ஷூட்டிங் தொடங்கி நடந்துகொண்டிருந்த நிலையில், திடீரென்று 'குர்பானி'படத்துக்காக, தனது ஹேர்ஸ்டைலை வெட்டி, அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார் நிகம்.

அதிர்ச்சி அடைந்த ஜார்ஜ்
இதனால் 'வெயில்' இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ் அதிர்ச்சி அடைந்தனர். தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார் ஜார்ஜ். பிறகு இந்தப் பிரச்னை சங்கத்தில் பேசி தீர்க்கப்பட்டது. 'இனி கெட்டப்பை மாற்ற மாட்டேன்' என்று உறுதி அளித்திருந்தார் நிகம்.

உறுதியை மீறிய நிகம்
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், தயாரிப்பாளர் சங்கத்திடம் அளித்த உறுதியை மீறி, புதிய கெட்டப்பை வெளியிட்டார் நிகம். அதில், தலைமுடியை, மண்டையின் இரண்டு பக்கமும் நன்றாக ஷேவ் செய்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஜார்ஜ், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மீண்டும் புகார் செய்தார்.

தடை விதித்த சங்கம்
விசாரித்த சங்க நிர்வாகிகள், ஷேன் நிகமுக்குத் தடைவிதித்தனர். அவர் நடித்த வெயில், குர்பானி படங்கள் கைவிடப்படுவதாகவும் அந்தப் படங்களுக்காகச் செலவழிக்கப்பட்ட ரூ.7 கோடியை ஷேன் நிகம் திருப்தித் தர வேண்டும் என்றும் கூறினர். இந்நிலையில் அவர் நடிக்கும் தமிழ்ப் படத்தில் நடிப்பதற்கும் தடை விதிக்க இருப்பதாகக் கூறியிருந்தனர். அது எந்த தமிழ்ப் படம் என்பது தெரியாமல் இருந்தது.

விக்ரம் 58
அது, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'விக்ரம்'நடிக்கும் படம் என்பது தெரிய வந்துள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், 'அசுரன்' படத்தில் நடித்த டீஜே அருணாசலம் ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். படத்துக்கு அமர் என்று டைட்டில் வைத்திருப்பதாக பரவுகிறது தகவல்.


Click it and Unblock the Notifications











