போடுடா வெடிய.. இனி ஹாலிவுட்டுக்கே டஃப் கொடுப்போம்.. ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் த்ரிஷ்யம்!
சென்னை : மலையாளத்தில் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த த்ரிஷ்யம் திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்து உள்ளனர்.
2015ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரைப்படம் த்ரிஷ்யம். இப்படத்தில் மோகன்லால், மீனா,எஸ்தர் அனில், ஆஷா சரத் ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படம் திரையரங்கில் வெளியாகி மகத்தான வெற்றியை ருசித்ததைத் தொடர்ந்து, தமிழ், கன்னடம், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.

த்ரிஷ்யம்
த்ரிஷ்யம் திரைப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் வெளியானது. இதில் கமல்ஹாசன்,கௌதமி, நிவேதா தாமஸ், எஸ்தர் அனில்,ஆஷா சரத், கலாபாவன் மணி ஆகியோர் நடித்திருந்தனர். அதிரடி திருப்பங்களுடன் அடுத்து என்ன அடுத்து என்ன என்ற பரபரப்புடன் வெளியான பாபநாசம் படம் திரையரங்கில் அரங்கு நிறைந்த காட்சியாக ஓடியது. த்ரிஷ்யம் திரைப்படம் தெலுங்கிலும் அதே பெயரில் எடுக்கப்பட்டது. இதில் வெங்கடேஷ், மீனா ஆகியோர் நடித்திருந்தனர்.

மகத்தான வெற்றி
த்ரிஷ்யம் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து ஆறு ஆண்டுகளுக்கு பிறகு த்ரிஷ்யம் இரண்டாம் பாகம் நேரடியாக அமேசானில் வெளியானது. இரண்டாம் பாகத்திலும் மோகன்லால், மீனாவே நடித்திருந்தனர். இப்படத்திற்கும் ரசிகர்களின் பேராதரவு கிடைத்ததால், தெலுங்கு மற்றும் இந்தியில் அதே பெயரில் வெளியானது. இந்தியில் த்ரிஷ்யம் 2 சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது.

ஹாலிவுட்டில் ரீமேக்
இந்நிலையில் த்ரிஷ்யம் மற்றும் த்ரிஷ்யம் 2 படங்களை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பனோரமா ஸ்டூடியோஸ் இன்டர்நேஷனல் லிமிமெட் நிறுவனம், இந்திய மொழிகள் அல்லாத பிற மொழிகளில் இதை ரீமேக் செய்வதற்கான உரிமையை பெற்றுள்ளது. ஆங்கிலம், கொரியா உட்பட பல்வேறு மொழிகளில் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. ஹாலிவுட் படங்களை நாம் காப்பி அடித்த காலம் போய் இப்போது நம் படம் ஹாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளதை நினைத்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

த்ரிஷ்யம் 3
மேலும், த்ரிஷ்யம் முதல் பாகத்தையே மிஞ்சும் அளவுக்கு இரண்டாம் பாகம் இருந்ததால், ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடினார்கள். இரண்டாம் பாகத்தின வெற்றியை த்ரிஷ்யம் படத்தின் 3 ஆம் பாகம் விரைவில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மூன்றாம் பாகத்தின் க்ளைமேக்ஸ் முதல் இரண்டு பாகங்களை விட அட்டகாசமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











