Mammootty Net Worth: அம்மாடியோவ்.. இத்தனை கோடிகளா? மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் சொத்து மதிப்பு
கொச்சி: நடிகர் மம்முட்டி மலையாள சினிமாவில் மாபெரும் அடையாளமாக இருந்தாலும் அவரை தென்னிந்திய சினிமாவின் அடையாளமாக மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவின் அடையாளமாகவே குறிப்பிடலாம். அதற்கு காரணம், இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்தை இயற்றிய பாபாசாகேப் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று சினிமாவில் அம்பேத்கரின் கதாபாத்திரத்தில் நடித்தார். உலகம் முழுவதும் அறியப்படும் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றில் அம்பேத்கர் கதாபாத்திரத்தில் நடித்த மம்மூட்டி இன்று அதாவது செப்டம்பர் 7ஆம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இது மம்முட்டியின் 73வது பிறந்த நாள். இந்த பிறந்த நாளில் அவர் குறித்தும் அவரது சொத்து மதிப்பு குறித்தும் இந்தத் தொகுப்பில் காணலாம்.
கேரளாவில் வைக்கத்திற்குப் பக்கத்தில் 'செம்பு' என்ற கிராமத்தில் இஸ்மாயில் ஃபாத்திமா தம்பதியின் மகனாகப் பிறந்தவர்தான் மம்முட்டி. எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியிலும், எர்ணாகுளம் சட்டக் கல்லூரியிலும் படித்தவர். சினிமா நடிகனாக மிகவும் புகழ்பெற்ற மம்முட்டி மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மம்முட்டி 1979-ல் வெளியான வில்கானுண்டு சொப்னங்கள் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு வந்தார். அதாவது கனவுகள் விற்பனைக்கு இருக்கிறது என்பதுதான் அந்தப் படத்தின் தலைப்பின் தமிழாக்கம். சிறந்த நடிகருக்கான விருதினை தேசிய அளவில் மூன்று முறையும் மாநில அளவில் 20க்கும் மேற்பட்ட முறையும் பெற்றிருக்கிறார். இந்தியாவின் மிக உயரிய விருதாகிய பத்மஸ்ரீ பட்டம் பெற்ற நடிகர் மம்முட்டி. இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற அவரது ரசிகர்கள் அவரது வீட்டின் முன்னால் நள்ளிரவு 12 மணிக்கே கூடினர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் உலா வருகின்றது.
என்.ஜி.ஓ: நடிகராக மட்டும் இல்லாமல் தனது பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை உருவாக்கி சிறப்பாக நடத்தி வருகின்றார். அண்மையில் வயநாடு பகுதி முழுவதும் நிலச்சரிவினால் பெரும் அழிவைச் சந்தித்தபோது, இவரது தன்னார்வ தொண்டு நிறுவனம் அரசுடன் நின்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தது. மலையாளத்தில் கர்வம் இல்லாத நடிகர் என்றால் அதில் மம்முட்டியின் பெயரைக் குறிப்பிடலாம். அதற்கு காரணம், எந்த கதாபாத்திரம் என்றாலும் அவர் நடிப்பார். ஒடுக்கப்பட்ட மக்களில் ஒருவராகவும் நடிப்பார். ஆனால் இதே மனநிலை மற்ற நடிகர்களிடம் இவர் சினிமாவில் வளர்ந்து வந்த காலத்தில் இருந்ததா என்றால் கேள்விக்குறிதான்.

எழுத்தாளர்: அதேபோல் மம்முட்டி காழ்ச்சப்பாடு என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் தனது வாழ்வனுபவங்களை எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் தமிழில் "மூன்றாம்பிறை வாழ்வனுபவங்கள் " என்ற பெயரில் கே.வி. ஷைலஜா என்பவரால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்திற்கு மலையாளத்தில் மட்டும் இல்லாமல் தமிழிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆண்டு வருமானம்: மம்முட்டிக்கு ஒரு ஆண்டுக்கு சுமார் ரூபாய் 50 கோடி வரை வருமானம் வருகின்றது என கூறப்படுகின்றது. இந்த வருமானம் என்பது இவர் சினிமாவில் நடிப்பதன் மூலமும், ஏற்கனவே முதலீடு செய்துள்ளவற்றில் இருந்தும் வருகின்றது. மம்முட்டி இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் ரியல் எஸ்ட்டேட்டில் கணிசமான அளவிற்கு முதலீடு செய்துள்ளார். மேலும், இவருக்கு, கொச்சியில் உள்ள கடவந்திராவில் ஏரிக்கரை பங்களா உள்ளது. இதன் மதிப்பு மட்டும் ரூபாய் 5 கோடி வரை இருக்கும் என கூறப்படுகின்றது.

கார் கலெக்ஷன் : இதுமட்டும் இல்லாமல், இவருக்கு அதிகப்படியான கார்கள் வாங்குவதிலும் ஆர்வம் உள்ளது. அந்தவகையில், இவரிடத்தில், ரூபாய் 2.55 கோடி முதல் ரூபாய் 4 கோடி மதிப்பிலான 4-லிட்டர் ட்வின்-டர்போ வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஜி க்ளாஸ் கார் உள்ளது. இது வெறும் 5.4 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது. அதேபோல் ரூபாய் 1.64 கோடியில் இருந்து ரூபாய் 1.84 கோடி மதிப்பிற்கு ஆல்ட்ரேசன் செய்யப்பட்ட ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரும் உள்ளது.
சொத்து மதிப்பு: மற்றொரு சொகுசுக் கார் வகையான ஜாகுவார் எஃப் வகை காரில், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் கொண்ட இரண்டு இருக்கைகள் மட்டுமே உள்ள, மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த கார் செல்லும். இதுமட்டும் இல்லாமல் சுமார் 20க்கும் குறையாமல் இவரிடத்தில் கார் உள்ளது. ஆனால் அனைத்து கார்களின் எண்களும் 369 என்ற பதிவு எண் கொண்டது என்பது தனிச் சிறப்பு. மம்முட்டிக்கு வரும் ஆண்டு வருமானம், அசையும் அசையா சொத்துகள், முதலீடுகள் என சுமார் ரூபாய் 370 கோடி மதிப்புக்கு சொத்து இவருக்கு உள்ளது என கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











