அறுவை சிகிச்சை செய்தால் கால் குட்டையாகிவிடும்.. 21 ஆண்டுகளாக வேதனையை அனுபவிக்கும் மம்மூட்டி.. பகீர்!
சென்னை: அறுவை சிகிச்சை செய்து கொண்டால் கால் குட்டையாகிவிடும் என்பதால் 21 ஆண்டுகளாக அறுவை சிகிச்சை செய்து கொள்ள வில்லை என நடிகர் மம்மூட்டி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் மம்முட்டி. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் கோலொச்சி வருகிறார்.
மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, இங்கிலிஷ் என பல மொழிகளிலும் தடம் பதித்துள்ளார் நடிகர் மம்மூட்டி.

துணை நடிகராக அறிமுகமான மம்மூட்டி
மலையாளத்தில் 1971ஆம் ஆண்டு வெளியான அனுபவங்கள் பாலிச்சக்கல் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் மம்மூட்டி. இந்த படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்தார். அதன் பிறகு காலச்சக்கரம் என்ற படத்தில் நடித்தார் நடிகர் மம்மூட்டி. இந்த படத்திலும் சிறிய கதாப்பாத்திரத்திலேயே நடித்தார் மம்மூட்டி.

முதல் முறையாக லீடிங் ரோல்
நடிகர் மம்மூட்டி தேவலோகம் என்ற படத்தில் முதல் முறையாக லீடிங் ரோலில் நடித்தார். ஆனால் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. இதனை தொடர்ந்து மேலா என்ற டிராமா படத்தில் லீட் ரோல்களில் ஒருவராக நடித்தார். இந்த படம் மம்மூட்டியின் மூன்றாவது படமாக கிரெடிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார் நடிகர் மம்மூட்டி.

தேசிய விருதுகள் பத்ம விருதுகள்
இதுவரை 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மம்முட்டி, சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளை மூன்று முறையும், கேரள அரசின் விருதுகளை 6 முறையும் பெற்றுள்ளார். மேலும் சினிமாவில் அவரது சேவையை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி அவரை கவுரவித்துள்ளது.

பெரிய பிரேக் கொடுத்த நியூ டெல்லி
மம்மூட்டி நடிப்பில் 1987ஆம் ஆண்டு வெளியான நியூ டெல்லி படம் பெரும் வெற்றி பெற்றது. இதன்மூலம் மற்ற மொழி சினிமாத்துறைக்கும் பரிட்சயமானார் நடிகர் மம்மூட்டி. நடிகர் மம்மூட்டியின் சினிமா கேரியரில் நியூ டெல்லி படம் மேஜர் படமாக பார்க்கப்படுகிறது.

கடைசியாக தமிழில் பேரன்பு
தமிழில் மவுனம் சம்மதம் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் மம்மூட்டி. அழகன், தளபதி, மக்கள் ஆட்சி, புதையல், மறுமலர்ச்சி, எதிரும் புதிரும், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் பேரன்பு படத்தில் நடித்துள்ளார் மம்முட்டி.

தெலுங்கில் ஸ்வாதி கிரணம்
இதேபோல் தெலுங்கில் ஸ்வாதி கிரணம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் மம்மூட்டி. தெலுங்கிலும் குறிப்பிட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகர் மம்மூட்டி. கடைசியாக அவரது நடிப்பில் ஒன் என்ற படம் வெளியானது. தற்போது ஏஜென்ட், பீஷ்மா பர்வம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மம்மூட்டி பகிர்ந்த பகீர் தகவல்
இந்நிலையில் நடிகர் மம்மூட்டி தனது உடல் நிலை குறித்து பகிர்ந்துள்ள ஒரு தகவல் ரசிகளையும் சினிமா பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனையில், ரோபோட்டிக் அறுவை சிகிச்சை திட்ட துவக்க விழாவில் பங்கேற்றார் நடிகர் மம்மூட்டி.

ஆபரேஷன் செய்தால் கால் குட்டையாகிவிடும்
அப்போது நிகழ்ச்சியில் பேசிய மம்முட்டி, தனது இடதுகால் தசை நார் சேதமடைந்து 21 ஆண்டுகள் ஆனதாக தெரிவித்தார். அதற்கு அறுவை சிகிச்சை செய்தால் கால் குட்டை ஆகிவிடும் என்பதாலும், அதைவைத்து தன்னை கிண்டல் செய்வார்கள் என்பதாலும், இதுவரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பீஷ்மா பர்வம் படத்தில் பிஸி
காலில் ஏற்பட்ட காயத்திற்கு நடிகர் மம்முட்டி 21 ஆண்டுகளாக அறுவை சிகிச்சை செய்துகொள்ளாதது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் மம்மூட்டி தற்போது பீஷ்மா பர்வம் என்ற படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இந்தப் படத்தை அமல் நீரத் இயக்கி வருகிறார்.

துல்கர் சல்மான் தயாரிக்கும் படம்
இப்படத்தில் சவுபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாஸி, ஷைன் டாப் சாக்கோ, திலீஷ் போத்தன், ஃபர்கான் பாஸில், அனசுயா பரத்வாஜ் மற்றும் லீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனிடையே நடிகர் மம்மூட்டி தனது மகன் துல்கர் சல்மான் தயாரிக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

புதுமுக இயக்குநர் இயக்கத்தில்
இந்தப் படத்திற்கு புழு என பெயரிடப்பட்டுள்ளது. உயரே படத்தில் எக்ஸிக்யூட்டிவ் புரெடியூசராக பணியாற்றிய ரதீனா இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் பார்வதி திருவோத் மம்மூட்டிக்கு ஜோடியாக நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











