Mammootty: கௌதம் வாசுதேவ் மேனனுடன் இணையும் மம்முட்டி.. செம ரொமான்ஸ் படமோ? போஸ்டர் தரமா இருக்கே..

கொச்சி: நடிகர் மம்முட்டி மலையாள சினிமாவிம் மாபெரும் அடையாளமாக இருந்தாலும் அவரை தென்னிந்திய சினிமாவின் அடையாளமாக மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவின் அடையாளமாகவே குறிப்பிடலாம். அதற்கு காரணம், இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்தை இயற்றிய பாபாசாகேப் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று சினிமாவில் அம்பேத்கரின் கதாபாத்திரத்தில் நடித்தார். உலகம் முழுவதும் அறியப்படும் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றில் அம்பேத்கர் கதாபாத்திரத்தில் நடித்த மம்மூட்டி இன்று அதாவது செப்டம்பர் 7ஆம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இது மம்முட்டியின் 73வது பிறந்த நாள். இந்நிலையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரது புது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிப்பில் உருவாகி வெளியாகவுள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடிப்பது மட்டும் இல்லாமல், படத்தினை தானே தயாரிக்கின்றார். மேலும் இந்தப் படத்தினை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குகின்றார். படத்திற்கு டாமினிக் அன்ட் தி லேடிஸ் பர்ஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இது மம்முட்டி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

mammootty gautham vasudev menon

கேரளாவில் வைக்கத்திற்குப் பக்கத்தில் 'செம்பு' என்ற கிராமத்தில் இஸ்மாயில் ஃபாத்திமா தம்பதியின் மகனாகப் பிறந்தவர்தான் மம்முட்டி. எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியிலும், எர்ணாகுளம் சட்டக் கல்லூரியிலும் படித்தவர். சினிமா நடிகனாக மிகவும் புகழ்பெற்ற மம்முட்டி மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான பிரம்மயுகம், கன்னூர் ஸ்குவாட் மற்றும் காதல் தி கோர் ஆகிய படங்கள் மெகா ஹிட் அடித்தது.

mammootty gautham vasudev menon

அறிமுகம்: மம்முட்டி 1979-ல் வெளியான வில்கானுண்டு சொப்னங்கள் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு வந்தார். அதாவது கனவுகள் விற்பனைக்கு இருக்கிறது என்பதுதான் அந்தப் படத்தின் தலைப்பின் தமிழாக்கம். சிறந்த நடிகருக்கான விருதினை தேசிய அளவில் மூன்று முறையும் மாநில அளவில் 20க்கும் மேற்பட்ட முறையும் பெற்றிருக்கிறார். இந்தியாவின் மிக உயரிய விருதாகிய பத்மஸ்ரீ பட்டம் பெற்ற நடிகர் மம்முட்டி. இதுவரை பல மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

mammootty gautham vasudev menon

போஸ்டர்: கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் படத்தினை இயக்க களமிறங்கியுள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இதுமட்டும் இல்லாமல் இந்தப் படம் நேரடி தமிழ் படமா அல்லது மலையாளத்தில் உருவாக்கப்பட்டு தமிழில் டப் செய்யப்படவுள்ளதா, அல்லது மலையாளத்தில் மட்டுமே படம் ரிலீஸ் செய்யப்படுகின்றதா என்பது குறித்து இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் போஸ்டரைப் பார்க்கும்போது மம்முட்டி பெண்களின் பர்ஸ் மற்றும் ஹேண்ட் பேக்கினை திருடும் திருடன் கதாபாத்திரத்தில் நடிப்பாரோ என்ற சந்தேகம் எழுகின்றது.

mammootty gautham vasudev menon

இதுவா கதை? அதேபோல் போஸ்டரில் இடம் பெற்றுள்ள மற்ற விஷயங்களை பார்க்கும்போது, மம்முட்டி க்ரைம் போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றார் என்ற எண்ணமும் தோன்றுகின்றது. அதனால்தான் ஒரு ஆணின் புகைப்படத்தைச் சுற்றி நான்கு பெண்ணின் புகைப்படங்கள் இருக்கின்றது. மேலும் சில குறிப்புகளும் எழுதப்பட்டுள்ளது. படத்திற்கு தர்புகா சிவா இசை அமைக்கின்றார். மம்முட்டியின் பிறந்த நாளில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

mammootty gautham vasudev menon

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X