ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்.. கதவை உடைத்த போலீஸ்.. சடலமாக கிடந்த சின்னத்திரை நடிகர்!
சென்னை: பிரபல மலையாள சின்னத்திரை நடிகரான திலீப் சங்கர் சடலமாக ஓட்டல் அறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். இந்த மரணம் குறித்து போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரின் திடீர் மறைவு பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதால், பல நடிகர்கள் கண்ணீர் மல்க அவரின் ஆன்மா சாந்தி அடைய இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மலையாள நடிகரான திலீப் சங்கர், சப்பா குரிஷு, நார்த் 24 காதம் உள்ளிட்ட சில திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அது மட்டுமில்லாமல், சின்னத்திரையில், அம்மா அறியாதே, சுந்தரி, பஞ்சாக்னி உட்பட பல தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.தமிழில் ஹிட் ஆன சுந்தரி சீரியல் கதை மலையாளத்தில் அதே பெயரில் எடுக்கப்பட்டு ஒளிபரப்பானது அந்த சீரியலில் திலீப் ஷங்கர் நடித்து இருக்கிறார்.

அறையில் வீசிய துர்நாற்றம்: திலீப் சங்கர் கடந்த 19ந் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற படப்பிடிப்பிற்காக திருவனந்தபுரம் வான்ரோஸ் சந்திப்பில் உள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கி இருந்தார். ஓட்டலில் அவர் அறை எடுத்த பிறகு ஒரு சில முறை மட்டுமே வெளியே வந்துள்ளார். சில நாட்களாக அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அவர் படப்பிடிப்புக்கும் வராததாலும், அவரின் தொலை பேசி எண்ணில் தொடர்பு கொண்டும் அவர் போனை எடுக்காததால், படக்குழுவினர் ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, திலீப் சங்கர் தங்கியிருந்த அறையின் அருகே சென்ற போது துர்நாற்றம் வீசி உள்ளது.

இறந்து இரண்டு நாட்கள்: அறையிலிருந்து துர்நாற்றம் வந்ததைக் கண்டு அச்சம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, அவர்கள் கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது அவர் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார், ஓட்டலின் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் இறந்து 2 நாட்கள் ஆகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் மரணத்திற்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியும் என போலீசார் தெரிவித்துள்ளனர். நடிகை திலீப் சங்கர் மறைவுக்கு மலையாள திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











