தங்கையுடன் இருந்த ரகசிய உறவு.. அபர்ணா நாயரின் தற்கொலைக்கு காரணம் இதுதானா?

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை அபர்ணா நாயரின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் அவரின் கணவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

31 வயதே ஆன அபர்ணா நாயகர் ஆகஸ்ட் 31ந் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு, அனைவரையும் தீராத சோகத்தில் ஆழ்த்தினார்.

Malayalam television actress Aparna Nair family blamed her husband Sanjith for the death

இவர், கல்கி, முத்துகவ், அச்சையன்ஸ், மேகத்தீரதம் உள்பட பல்வேறு படங்களில் பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

அபர்ணா நாயர்: சினிமா மற்றும் சின்னத்திரையில் பிஸியாக நடித்து வந்த அபர்னா நாயருக்கு திருமணமாகி சஞ்சித் என்ற கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். திருவனந்தபுரம் கரமனா பகுதியில் வசித்து வரும் இவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் அபர்ணா வெளியே வராததால், சந்தேகம் அடைந்த அவரது தாயார் பல முறை கதவை தட்டி உள்ளார். அப்போதும் அவர் கதவை திறக்காததால், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்தார்.

Malayalam television actress Aparna Nair family blamed her husband Sanjith for the death

தங்கையுடன் ரகசிய உறவு: இதுகுறித்து திருவனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு நடிகை அபர்ணாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அபர்ணாவின் கணவர் சஞ்சித்திற்கும் அபர்ணாவின் தங்கைக்கும் இரண்டு வருடத்திற்கு முன் ரகசிய உறவு இருந்துள்ளது. இதை தெரிந்து கொண்ட அபர்ணா இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் சஞ்சித் கைது செய்யப்பட்டார்.

போதையால் வரம்பு மீறிய பேச்சு: சிறையில் இருந்து வெளியே வந்த சஞ்சித், தனியாக கஷ்டப்படுவதை பார்த்து, அபர்ணா தனது மனதை மாற்றிக்கொண்டு, அவரை மன்னித்து வாழ்ந்து வந்தார். இதையடுத்து, அபர்ணாவை பழிவாங்க நினைத்த கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து அவரை வரம்பு மீறி பேசி உள்ளார். மேலும், நீ சினிமாவில் நடிப்பது எனக்கு பிடிக்கவில்லை என்ற நடிப்புக்கும் தடை விதித்துள்ளார்.

Malayalam television actress Aparna Nair family blamed her husband Sanjith for the death

மன அழுத்தம்: இதனால், சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட அபர்ணா நாயர், கடந்த சில மாதமாக மருத்துவமனை ஒன்றில் வரவேற்பாளராக வேலை பார்த்துள்ளார். கணவருக்காக நடிப்பையே விட்ட போது, அவரது கணவர் தினமும் குடித்துவிட்டு வருவதால், மன அழுத்தத்தில் இருந்த அபர்ணா நாயர், மன விரக்தியில் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.

கணவர் தான் காரணம்: அபர்ணாவின் தற்கொலைக்கு காரணம், அவரது கணவர் சஞ்சித் தான் அபர்ணாவின் தாயார் குற்றம் சாட்டி உள்ளதால், திருவனந்தபுரம் போலீசார் சஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், சஞ்சித் எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்ததாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Read more about: death மரணம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X