எரியுதுடி மாலா.. 40 வயது நடிகையை திருமணம் செய்த 50 வயது நடிகரின் ரொமான்டிக் ரிசப்ஷன்!

சென்னை: 90ஸ் கிட்ஸ் எல்லாம் எப்போடா கல்யாணம் ஆகும் என்று பெண்ணை தேடித் தேடி அலைந்து கொண்டு இருக்கும் நேரத்தில் 40 வயதே ஆன மலையாள சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர், 50 வயதான இயக்குநரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண போட்டோ இணையத்தில் காட்டுத்தீ போல பரவியது. தற்போது இவர்களின் ரொமான்டிக் ரிசப்ஷன் வீடியோக்களைப் பார்த்த இளசுகள் ஏக்க பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

மலையாள நடிகையான திவ்யா ஸ்ரீதர் 18 வயதில் இருந்தே நடித்து வருகிறார். இவர் சீரியலில் நடித்துக்கொண்டு இருந்த போது திருமணம் செய்து கொண்டு நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். இவருக்கு தேவானந்த் என்ற மகனும், மாயா என்ற மகளும் இருக்கும் நிலையில், 2019ம் ஆண்டு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். அதன் பிறகு மீண்டும் நடிக்க வந்த இவர், Varan doctor Aanu, patharamattu, Manathe kottaram என பல சீரியலில் பிசியாக நடித்து வருகிறார்.

kris venugopal divya sridhar reception

இரண்டாவது திருமணம்: நடிகை திவ்யா ஸ்ரீதர் 'பத்தரமாட்டு' தொடரில் நடித்துக்கொண்டு இருந்த போது, தன்னுடன் நடித்த கிரிஷ் வேணுகோபாலை அக்டோபர் 30ந் தேதி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குருவாயூர் கோவிலில் ரகசியமாக நடந்தது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்களின் திருமண போட்டோ இணையத்தில் டிரெண்டானதை தொடர்ந்து இது என்ன அறுபதாவது திருமணமா? என்று இவர்களை இணையவாசிகள் ட்ரோல் செய்தனர்.

செக்ஸ் மாட்டும் தான் வாழ்க்கையா: இதற்கு பதிலடி கொடுத்துள்ள நடிகை திவ்யா ஸ்ரீதர், இணையத்தில் பரவி வரும் இந்த விமர்சனத்தை பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது. கிரிஷ் வேணுகோபால் 1975ம் ஆண்டு பிறந்தார் அவருக்கு 49 வயதாகிறது. நான் 1984ம் ஆண்டு பிறந்தேன் எனக்கு 40 வயதாகிறது. செக்ஸ் மட்டுமே வாழ்க்கை இல்லை, இப்போது என் குழந்தைகளுக்கு ஒரு நல்ல தந்தை கிடைத்து இருக்கிறார்.வயதை காரணமாக காட்டி பேசுபவர்கள் பேசட்டும். ஆயிரம் குடங்களில் வாயை மூடிவிடலாம். ஆனால் ஒரு மனிதரின் வாயை அடைக்க முடியாது என்று,சரியான பதிலடி கொடுத்து இருந்தார்.

எரியுதுடி மாலா: எந்த சோஷியல் மீடியா பக்கம் சென்றாலும் திவ்யா ஸ்ரீதர் மற்றும் கிரிஷ் வேணுகோபாலின் திருமணம் பற்றிய செய்தியைத்தான் இணையவாசிகள் படித்து வருகின்றனர். தற்போது இவர்களின் ரிசப்ஷன் வீடியோவில் இருவரும் கட்டிபிடித்தபடியும், முத்தம் கொடுத்தபடியும் இருக்கும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதைப்பார்த்த இளசுகள் எரியுதுடி மாலா... அந்த பேனைப்போடு என கடுப்பில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X