முதியவருடன் நெருங்கி பழகி ரூ.11 லட்சத்தை சுருட்டிய நடிகை…பிளான் போட்டு தூக்கிய போலீஸ்!
திருவனந்தபுரம்: Malayalam TV actress Nithya Sasi (டிவி சீரியல் நடிகை நித்யா சசி) 75வயது முதியவருடன் நெருங்கி பழகி ரூ.11 லட்சத்தை சுருட்டிய நடிகையை போலீசார் பக்காவாக பிளான் போட்டு தூக்கி உள்ளனர்.
பணம் என்றால் பிணம் கூட வாய் திறக்கும் என்ற பழமொழிக்கு ஏற்றாற்போல்,பணத்திற்காக பலர் படுமோசமான வேலைகளை செய்து வருகின்றனர்.
பணம் என்பது மிக முக்கியமாகிப்போனதால், அலுங்காமல், குலுங்காமல், வியர்வை சிந்தாமல் எப்படி பணத்தை சம்மாதிக்கலாம் என பலர் ரூம் போட்டு யோசித்து வருகின்றனர். அப்படி ஒரு நடிகை விரித்த வலையில் சிக்கி 11லட்சத்தை பறிகொடுத்துள்ளார் 75 வயது மதிக்கதக்க முதியவர்.

வீட்டை பார்ப்பது போல்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான 75 வயது முதியவர், தனது வீட்டை வாடகைக்கு விடுவதாக கடந்த மே மாதம் விளம்பரம் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த விளம்பரத்தை பார்த்த மலையாள சீரியல் நடிகை நித்யா சசி முதியவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
ஆசையை தூண்டிய நடிகை: இதையடுத்து தனது ஆண் நண்பர் பினுவுடன் வீட்டைப் பார்ப்பதற்காக வந்த நடிகை, தனது அழகை காட்டி, முதியவரை தனது வலையில் விழவைத்துள்ளார். முதியவருடன் அடிக்கடி அவருடன் தொலைபேசியில் பேசி அவரின் ஆசையை தூண்டி உள்ளார். நடிகையின் அழகில் மயங்கிப்போன அந்த முதியவர் ஒருகட்டத்தில் தலையாட்டி பொம்மையாகவே மாறினார்.

முதியவரை மிரட்டி பணம் பறிப்பு: பின் இருவரும் உல்லாசமாக இருக்கலாம் என கூறி அவரது வீட்டுக்கு சென்று, முதியவரை நிர்வாணமாக்கி அவரை தனது செல்போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார். அதன்பின்னர் அந்த வீடியோவை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ 11 லட்சத்தை வாங்கி உள்ளனர். மேலும் பணம் வேண்டும் என்றும் பணத்தை தராவிட்டால், நிர்வாண வீடியோவையும், போட்டோவையும் இணையத்தில் லீக் செய்து விடுவோம் என்று மிரட்டி உள்ளனர்.
பக்க பிளான் போட்ட போலீசார்: இதனால் பயந்து போன அந்த முதியவர் துணிந்து வந்து திருவனந்தபுரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து, அந்த நடிகையை கையும் களவுமாக பிடிக்க பக்காவாக பிளான் போட்ட போலீசார். பணம் ரெடியாகிவிட்டது என நடிகை மற்றும் அவரது நண்பரை வீட்டுக்கு அழைத்துள்ளனர். பணத்தை வாங்கிக் கொண்டு ஜாலியாக இருக்கலாம் என ஆசை ஆசையாக வந்த நடிகையை மறைந்து இருந்த போலீசார் கொத்தாக தூக்கினர்.


Click it and Unblock the Notifications











