மகளுக்காக இயக்குனரின் பாலியல் சீண்டலை தாங்கிக்கிட்டேன்: சீரியல் நடிகை குமுறல்
Recommended Video

திருவனந்தபுரம்: மலையாள டிவி சீரியல் இயக்குனர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
பிரபல மலையாள தொலைக்காட்சி தொடர் உப்பும் மொளகும். சுமார் 650 எபிசோடுகளை கடந்துள்ள இந்த தொடரில் 5 குழந்தைகளுக்கு தாயாக நடித்து வருபவர் நிஷா சாரங்.
உப்பும் மொளகும் இயக்குனர் உன்னி கிருஷ்ணன் மீது நிஷா புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,

தொல்லை
உன்னி கிருஷ்ணன் நெடுங்காலமாகவே எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். அவரின் செயல்கள் பிடிக்கவில்லை என்பதை நான் தெரிவித்தும் அவர் என்னை விடுவதாக இல்லை.

திட்டு
உன்னி கிருஷ்ணன் தான் எதிர்பார்த்தது கிடைக்காது என்பது தெரிந்ததும் என்னை அசிங்கமாக திட்டத் துவங்கினார். மேலும் செட்டில் எப்போதும் என்னிடம் மோசமாக நடந்தார். செட்டில் மட்டும் அல்ல போனில் அசிங்கம் அசிங்கமாக மெசேஜ் அனுப்புவார்.

அழுகை
உன்னி என்னை செட்டில் அவமதிப்பது அனைவருக்கும் தெரியும். அவரின் தொல்லை தாங்க முடியாமல் நான் பல முறை அழுதுள்ளேன். நடிகர் பிஜு உள்ளிட்ட கலைஞர்கள் உன்னி கிருஷ்ணனை பல முறை எச்சரித்துள்ளனர். ஆனால் அவர் எதையும் கண்டுகொள்ளவில்லை.

போதை
உன்னி தினமும் குடித்துவிட்டு தான் செட்டுக்கு வருவார். நான் கத்தார் மற்றும் அமெரிக்கா சென்றபோது இந்த தொடருக்காக நான் கவுரவிக்கப்பட்டேன். அது உன்னிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. நான் சேனல் தலைவர் மற்றும் இயக்குனரிடம் அனுமதி பெற்று அமெரிக்காவில் நடந்த விருது விழாவுக்கு சென்றேன். ஆனால் நான் அனுமதி பெறவில்லை என்று கூறி என்னை தொடரில் இருந்து நீக்கிவிட்டார் உன்னி.

குடும்பம்
நடிப்பு தான் என் தொழில். இதில் கிடைக்கும் வருமானத்தில் தான் என் குடும்பம் நடக்கிறது. என் மகளின் திருமணமத்திற்காக அனைத்து அவமானங்களையும் பொறுத்துக் கொண்டேன். உன்னியை அந்த தொடரில் நீக்கும் வரை நான் திரும்பி வர மாட்டேன் என்றார் நிஷா.


Click it and Unblock the Notifications











