'விஷால் அன்ட் கோ'வை நாக்கை பிடுங்குகிற மாதிரி நறுக்குன்னு 4 கேள்வி கேட்ட மலேசிய நாளிதழ்
Recommended Video

சென்னை: நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதி திரட்ட சென்ற நடிகர்களை மலேசிய நாளிதழ் ஒன்று அசிங்கப்படுத்தியுள்ளது.
நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுகிறேன் என்று கூறி நிதி திரட்ட மலேசியாவில் நட்சத்திர கலை விழா நடத்தினார்கள். கலைவிழாவில் சீனியர்களை விஷால் அன்ட் கோ அவமதித்துவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
கட்டிடம் கட்ட இவர்களுக்கு எவ்வளவு பணம் தான் தேவைப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

அசிங்கம்
இங்கு பிச்சை எடுக்க வந்தீர்களா என்று கேட்டு மலேசியாவில் வெளியாகும் தமிழ் நாளிதழ் ஒன்று விஷால் அணியினரை அசிங்கப்படுத்தி செய்தி வெளியிட்டது. அதை விஷால் கண்டும் காணாதது போன்று உள்ளார்.

கேவலம்
பொது மக்களிடம் நிதி திரட்டும் நடிகர்-நடிகைகள் மக்களுக்காக என்ன செய்தார்கள்? என்று அந்த நாளிதழ் கேள்வி எழுப்பியுள்ளது. விஜயகாந்த் ஸ்டைலில் சொல்ல வேண்டுமானால் இது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா?

கோடி
நடிகர்கள், நடிகைகள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தை வெளியே கொண்டு வந்தாலே கட்டிடம் கட்ட தேவையான பணம் கிடைத்துவிடுமே என்று அந்த நாளிதழ் முகத்தில் அறைந்தது போன்று தெரிவித்துள்ளது.

நடிகர்கள்
10 நடிகர்கள் சேர்ந்து தங்களின் ஒரு படத்திற்கான சம்பளத்தை விட்டுக் கொடுத்தால் ரூ. 18 கோடிக்கு மேல் பணம் சேருமே என்று நறுக்கென்று கேட்டுள்ளது அந்த மலேசிய நாளிதழ். அந்த நாளிதழ் கேட்ட கேள்விகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மக்கள்
நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட நாங்கள் ஏன் பணம் கொடுக்க வேண்டும். உங்களிடம் இல்லாத பணமா? அந்த நாளிதழ் கேட்டதில் என்ன தப்பு என்கிறார்கள் தமிழக மக்கள்.


Click it and Unblock the Notifications











