For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாணி போஜன் நடிக்கும்… மலேசியா டூ அம்னீசியா… டிரைலர் ரிலீஸ் !

    |

    சென்னை : மலேசியா டூ அம்னீசியா திரைப்படம் ஜீ5 ஒடிடி தளத்தில் மே 28ந் தேதி வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இப்படத்தை மொழி படத்தை இயக்கிய ராதா மோகன் இயக்கி உள்ளார்.

    காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கோவிட் -19 தடுப்பூசி போட்டுக் கொண்ட லேடி சூப்பர்ஸ்டார்காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கோவிட் -19 தடுப்பூசி போட்டுக் கொண்ட லேடி சூப்பர்ஸ்டார்

    லாக்அப் திரைப்படத்திற்குப் பிறகு வைபவ் மற்றும் வாணிபோஜன் இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர்.

    பல படங்களில்

    பல படங்களில்

    சீரியலில் படு பிஸியாக நடித்து வந்த வாணிபோஜன் ஓ மை கடவுளே திரைப்படத்தில் 2வது கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, பாயும் ஒளி நீ எனக்கு, தாழ் திறவா, பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, காசிமேடு என வரிசையாக படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    ஜெய்யுடன்

    ஜெய்யுடன்

    கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஜெய் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவாகி வந்த ட்ரிபிள்ஸ் வெப் சீரிஸ் நடித்திருந்தார். இது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

    மே28ந் தேதி ரிலீஸ்

    மே28ந் தேதி ரிலீஸ்

    வைபவுடன் லாக்கப் படத்திலும் வாணி போஜன் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படம் நேரடியாக OTT-யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து வாணி போஜன் மீண்டும் வைபவுடன் இணைந்து மலேசியா டூ அம்னீசியா படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை மொழி பட இயக்கிய ராதா மோகன் இயக்கி உள்ளார். இப்படம் ஜீ5 ஒடிடி தளத்தில் மே28 ந் தேதி வெளியாக உள்ளது.

    நகைச்சுவை படம்

    நகைச்சுவை படம்

    இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் கருணாகரன், சச்சு, ரியா சுமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் நடிகர் வைபவ் ஒரு அம்னிஷியா நோயாளியாக நடிக்கிறார். மேலும், இப்படத்தில் வைபவின் மாமனாராக எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார். இணையத்தில் வெளியாகி உள்ள இந்த டிரைலர் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை படமாக அமைந்துள்ளது. மேலும், ரியா சுமன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

    English summary
    Malaysia To Amnesia Trailer out
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X