Don't Miss!
- Sports
சுழற்பந்துவீச்சு மட்டும் ஆபத்து இல்ல.. வேறு ஒரு ஆபத்தும் இருக்கு.. எச்சரிக்கை கொடுத்த ஆஸி வீரர்
- Finance
சுந்தர் பிச்சை சம்பளத்தில் பெரும் சரிவு.. 2023ல் புதிய சம்பள முறை..!
- News
"ஹாட்ரிக்".. பாஜக வீசிய பந்தை "சிக்ஸர்" அடித்த எடப்பாடி.. "ரன் அவுட்" ஆன ஓபிஎஸ்.. ஒரே நாளில் அதிரடி
- Automobiles
இத்தனை பேரா... லேண்ட் ரோவர் கார்களுக்கு அடிமையாக பாலிவுட் நடிகைகள்!! யார் யாரிடம் இருக்கு தெரியுமா?
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மலேசியாவில் ரஜினின்னு சொன்னா எல்லாருக்கும் தெரியும்.. பெருமை பகிர்ந்த ரசிகர்!
சென்னை : நடிகர் ரஜினிகாந்திற்கு சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். குறிப்பாக சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் அவருக்கு ரசிகர்கள் அதிகம்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய 169வது படமான ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள நிலையில் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.
பொன்னியின் செல்வன் ரஜினி, கமலுக்கு ஸ்பெஷல் ஷோ இல்லையா?..தாமதமாகும் இரு ஆளுமைகளின் பாராட்டு

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் 47 ஆண்டுகளை கடந்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு 47 ஆண்டுகால ரஜினியிசம் அவரது ரசிகர்களால் ட்ரெண்டாக்கப்பட்டது. கடந்த ஜனவரியில் அவரது அண்ணாத்த படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி.

ஜெயிலர் படம்
ஜெயிலர் படம் ரஜினியின் 169வது படமாகும். இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினி தொடர்ந்து வயதான நிலையிலும் சிறப்பான மாஸ் படங்களிலேயே நடித்து வருகிறார்.

அண்ணாத்த படத்தில் ரஜினி லுக்
ரஜினியை இப்படிப்பட்ட கேரக்டர்களில் பார்க்கத்தான் ரசிகர்கள் விரும்புகின்றனர். தனிப்பட்ட முறையில் சாதாரணமாக இயல்பாக காணப்படும் ரஜினி, தன்னுடைய கேரக்டர்களுக்கு சிறப்பான நியாயம் செய்யும்வகையில் அதை அழகாக கொடுக்கிறார். சமீபத்தில் அண்ணாத்த படத்திலும் இவரது லுக் அழகாக காட்டப்பட்டிருந்தது.

சர்வதேச அளவில் ரசிகர்கள்
ரஜினியின் கமர்ஷியல் ஹிட் படங்கள் இந்தியாவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் மிகவும் பிரபலம். மலேசியா, சிங்கப்பூர், சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் ரஜினியின் படங்களுக்கு எப்போதுமே மவுசு காணப்படுகிறது. அந்த வகையில் மலேசியாவில் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளதாக மலேசிய வாழ் தமிழர் ஒருவர் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

ரஜினி படத்தை பார்க்க மலேசியர்கள் ஆர்வம்
ரஜினி என்று சொன்னால் தமிழர்களுக்கு மட்டுமில்லாமல் மலேசியர்கள், சீனர்கள் என குழந்தைகள் முதல்கொண்டு அனைவருக்கும் தெரியும் என்று அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். அந்த அளவிற்கு அவர்மீது மரியாதையும் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். திரையரங்குகளுக்கு சென்றால் ரஜினியின் படத்திற்கு ஏராளமான மலேசியர்கள் வருவதை பார்க்க முடியும் என்றும் அந்த அளவிற்கு ரஜினிக்கு மலேசியாவில் கிரேஸ் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.