பிக்பாஸ் சீசன் 5ல் நதியா கலந்துக்கிறாரா? எதிர்பாராததை எதிர்பாருங்கள்னு ட்வீட் வேற போட்டிருக்காரே!

சென்னை: பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் டிக்டாக் பிரபலம் நதியா சங் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிக் பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 3ம் தேதி பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சியுடன் ஆரம்பமாக உள்ளது.

இந்த முறை போட்டியாளர்கள் ஒரு வாரம் மட்டுமே குவாரைண்டைனில் தங்க வைக்க உள்ளதாகவும் அனைவருக்கும் தடுப்பூசி அவசியம் உள்ளிட்ட கண்டிஷன்கள் போடப்பட்டுள்ளன.

சர்வைவர் வேற இருக்கே

சர்வைவர் வேற இருக்கே

இந்த முறை பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்கள் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஜீ தமிழில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வைவர் தமிழ் நிகழ்ச்சி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியின் டாஸ்க்குகள் ரொம்பவே டஃப் ஆக உள்ள நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கடும் போட்டியாக சர்வைவர் தமிழ் இருக்கும் என தெரிகிறது.

Recommended Video

SEMBARUTHI serial Farewell Party? | Bigg Boss வீட்டிற்கு செல்லும் Priya Raman | BB5 Tamil
ஐபிஎல் திருவிழா

ஐபிஎல் திருவிழா

சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் ரியாலிட்டி இல்லை என யோசிப்பவர்கள், பிக் பாஸ் ரசிகரக்ள் என பலரும் மொத்தமாக இன்று ஆரம்பிக்கப்படும் ஐபிஎல் திருவிழாவில் மூழ்கி விடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சர்வைவர் தமிழ் நிகழ்ச்சிக்கும் ஐபிஎல் போட்டிகள் கடும் பாதிப்பை கொடுக்கும் என்பது உறுதி.

புதுசு புதுசா புரமோ

புதுசு புதுசா புரமோ

பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரமோக்கள் வெளியாகி மீண்டும் அந்த நிகழ்ச்சி பக்கம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி வருகின்றன. முதலாவது புரமோ கல்யாண கலாட்டாவாக இருந்த நிலையில், இரண்டாவது புரமோவில் சமையல் அறையில் கமல் இருந்து பிக் பாஸ் விரைவில் எனக் கூறினார். கடைசியில் வெளியான மூன்றாவது புரமோவில் படுக்கையறையில் படுத்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் கிசு கிசு பேசினால் அது ஊருக்கே கேட்கும் என போட்டியாளர்களுக்கு எச்சரிக்கை கொடுத்து விட்டு சென்றுள்ளார்.

மலேசியா போட்டியாளர்

மலேசியா போட்டியாளர்

இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் மலேசிய போட்டியாளர்கள் யாரும் பங்கேற்க போவதில்லை என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது மலேசியாவின் பிரபல டிக் டாக் கலைஞர் நதியா சங் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக அதிரடி அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

எத்தனை டிக் டாக் பிரபலங்கள்

எத்தனை டிக் டாக் பிரபலங்கள்

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து கலந்து கொள்ள உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், தற்போது மற்றொரு டிக் டாக் பிரபலமாக நதியா சங் கலந்து கொள்ளப் போகிறார் என்கிற தகவல் ரசிகர்களை குதூகலப்படுத்தி உள்ளது. கடந்த சீசனை விட இந்த சீசன் நிச்சயம் கலர்ஃபுல்லாக கவர்ந்திழுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கன்ஃபார்ம் போட்டியாளர்கள்

கன்ஃபார்ம் போட்டியாளர்கள்

இதுவரை கன்ஃபார்ம் போட்டியாளர்கள் என்கிற ஒரு பெரிய லிஸ்ட்டே வந்துள்ளது. நடிகை ஷகீலாவின் மகள் மிலா, நமீதா மாரிமுத்து, இமான் அண்ணாச்சி, ஜிபி முத்து மேலும், சில பெயர்களும் அடிபட்டுள்ளன. ஆனால், எப்படி இருந்தாலும் நிகழ்ச்சி தொடங்கும் போது தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்பது உறுதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X