»   »  ரஜினியுடன் செல்ஃபி எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு மகிழ்ந்த மலேசிய பிரதமர்!

ரஜினியுடன் செல்ஃபி எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு மகிழ்ந்த மலேசிய பிரதமர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னையில் ரஜினியைச் சந்தித்து செல்ஃபி எடுத்துக் கொண்டதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்.

இந்தியாவுக்கு 5 நாட்கள் பயணமாக வந்துள்ள மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், இன்று பிற்பகல் நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

Malaysian PM shares a selfie with Rajinikanth

இது ஒரு நல்லிணக்க சந்திப்பு என்று ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறினார்.

Malaysian PM shares a selfie with Rajinikanth

இந்த சந்திப்பின்போது ரஜினியுடன் ஏகப்பட்ட தற்படங்களை ( செல்ஃபி) எடுத்துக் கொண்டார் நஜிப். அந்தப் படங்களில் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Malaysian PM shares a selfie with Rajinikanth

அதில், "தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினியுடனான இனிய நட்பு ரீதியான சந்திப்பு இப்போது நடந்து முடிந்தது," என்று தெரிவித்துள்ளார்.

English summary
Malaysian PM Najib Razak has tweeted a selfie with Rajinikanth in his twitter page.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil