இனி எப்டி பிகினியில ஆட்டம் போடுறது? இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு மாலத்தீவு தடை: பிரபலங்கள் ஷாக்!
சென்னை: தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் இருந்து சுற்றுலா வர மாலத்தீவு அரசு தடை விதித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. நாள் தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் பல மாநிலங்களில் தகன மேடைகள் கிடைக்காமல் உடல்கள் எரியூட்ட காத்துக்கிடக்கின்றன.

மாலத்தீவு அறிவிப்பு
இந்தியாவில் கொரோனா பரவல் மோசமாக உள்ளதால், வயதானவர்கள் இந்தியாவுக்கு பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. இந்நிலையில் இந்திய சினிமா பிரபலங்களுக்கு பேரிடியாக மாலத்தீவும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இன்று முதல் அமல்
அதாவது, இந்தியாவிலிருந்து மாலத்தீவுக்கு பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளை மக்கள் வசிக்கும் தீவுகளில் உள்ள சுற்றுலா நிலையங்களில் தங்க அனுமதிப்பது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. குறைந்தபட்ச சிரமங்களுடன் சுற்றுலாவை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான எங்கள் முயற்சிக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி என்றும் இந்த தடை ஏப்ரல் 27 அதாவது இன்று முதல் அமலுக்கு வருகிறது என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

பிரபலங்கள் அதிர்ச்சி
மாலத்தீவின் இந்த அறிவிப்பால் இந்திய சினிமா பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக 2020ஆம் ஆண்டின் பெரும்பாலான பகுதி லாக்டவுனிலேயே நிறைவடைந்தது.

போட்டோ ஷூட்
இதனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதுமே பாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து சினிமா பிரபலங்களும் மாலத்தீவில் சில்லிங் செய்து வந்தனர். மாலத்தீவு பீச்சிலும் பீச் ஹவுஸ் ரெசார்ட்களில் இருந்தும் விதவிதமான போட்டோ ஷூட்டுக்களை நடத்தினர்.
Recommended Video

பிகினி போட்டோ ஷூட்
பெரும்பாலான பிரபலங்கள் பிகினியில் போட்டோ ஷூட் நடத்தவே மாலத்தீவுக்கு சென்றனர். சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி சின்னத்திரை பிரபலங்களும் மாலத்தீவில் ஜாலி பண்ணி வந்தனர். இந்நிலையில் மாலத்தீவு இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு மாலத்தீவு சுற்றுலாத்துறை தடை விதித்திருப்பது சினிமா பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











