»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் விஜய்க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தமிழ்த் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் விஜய். டைரக்டர் சந்திரசேகர் மற்றும் பாடகி ஷோபாவின் மகனான அவர் பூவே உனக்காக,துள்ளாத மனம் துள்ளும், குஷி, ரசிகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.

தொடர்ந்து பல வெற்றிப் படங்களைத் தந்த அவருக்கும் லண்டனைச் சேர்ந்த சங்கீதாவுக்கும் இடையே கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. அதன்பிறகுகர்ப்பமான சங்கீதா பிரசவத்துக்கான லண்டனில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சங்கீதாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், குழந்தையும் நலமாக உள்ளதாக மருத்துவர்களும்,சங்கீதாவின் குடும்பத்தினரும் தெரிவித்தனர்.

பல படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் விஜய்யால் பிரசவத்தின்போது லண்டனில் இருக்க முடியவில்லை. அவரும், அவரது பெற்றோர்களும் ஆண் குழந்தைபிறந்த செய்தி கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைப்பட உலகத்தினருக்கும் அவர்கள் இனிப்பு வழங்கினர்.

Read more about: cinema, male child, tamilnadu, vijay
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil