வருகிறது 'டர்ட்டி பாலிட்டிக்ஸ்'... ஆனா, விதை - வித்யா போட்டது!
மும்பை: அரசியலில் நடந்து வரும் பாலியல் அசிங்கங்களை அம்பலப்படுத்தி ஒரு படம் தயாரிக்கப்போகிறார்கள். படத்திற்கு டர்ட்டி பாலிட்டிக்ஸ் என்றே பச்சையாக பெயர் வைத்து விட்டனர்.
ராஜஸ்தான் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிய நர்ஸ் பன்வாரி தேவி கொலை விவகாரம்தான் இந்தப் படத்தின் கதையாகும்.
மல்லிகா ஷெராவத்தான் இதில் முக்கிய பாத்திரத்தில் வருகிறார். வெள்ளை உடையில் வலம் வரும் அரசியல்வாதிகளின் பச்சைப் பக்கத்தை தோலுரித்துக் காட்டப்போகிறார்களாம் இதில்.
இந்தியில் உருவாகும் இப்படத்தில் மல்லிகாதான் முக்கிய பாத்திரமாக படம் முழுக்க கலக்கியுள்ளாராம்.

விதை - வித்யா போட்டது
இந்திய சினிமாவில் இதுபோன்ற டர்ட்டி படங்கள் வருவதற்கு மூல காரணம் வித்யா பாலன் நடித்த டர்ட்டி பிக்சர்ஸ் என்பதில் சந்தேகமில்லை. அவர்தான் ஆரம்பித்து வைத்தார்.இப்போது அத்தனை பேரும் அதில் ஓட ஆரம்பித்துள்ளனர்.

எல்லோரும் கொண்டாடும் சில்க்
வித்யாபாலன் நடித்த டர்ட்டி பிக்சர்ஸ் படம் சில்க் ஸ்மிதாவின் கதையைத் தழுவியது. இப்போது கன்னடம்,மலையாளம், வங்காளம் என பலரும் இதை ரீமேக் செய்ய ஆரம்பித்துள்ளாக்கினர்.

மலையாளத்தில் சனா.. கன்னடத்தில் வீணா
மலையாளத்தில்உருவாகும் டர்ட்டி பிக்சர்ஸில் சில்க் வேடத்தில்சனா கான் நடிக்கிறார். கன்னடத்தில் வீணா மாலிக் திறமை காட்டிக் கொண்டிருக்கிறார். பெங்காலியில் ராக்கி சாவந்த் நடிக்கிறார்.

அதே பாணியில்
இந்த நிலையில் தற்போது அரசியலில்நிலவி வரும் செக்ஸ் வக்கிரங்கள், பாலியல் விவகாரங்களை மையமாக வைத்து ஒரு படம் தயாராகிறது இந்தியில். டர்ட்டி பாலிட்டிக்கிஸ் என்று இதற்குப்பெயர் வைத்துள்ளனர்.

மல்லிகாதான்..
இந்தப் படத்தில் நாயகியாக அதகளம் செய்கிறார் மல்லிகா ஷெராவத். படத்தில் ஓம்பூரியும் இருக்கிறார். படத்தில் ராஜஸ்தான் நர்ஸ் பன்வாரி தேவி வேடத்தில் வருகிறார் மல்லிகா. அரசியல்வாதி ஒருவரால் எரித்துக் கொல்லப்பட்டவர் பன்வாரி என்பது நினைவிருக்கலாம்.

முழுக்க சேலையில்
வழக்கமாக கவர்ச்சியாகத்தான் இருப்பார் மல்லிகா. ஆனால் இப்படத்தில் முழுக்க முழுக்க புடவையில் வருகிறாராம். இதுவே ஒரு தனிச் செய்திதான்.

தம்பியை மிரட்டிய கும்பல்
முன்னதாக பன்வாரி வேடத்தில் மல்லிகா நடிக்கக்கூடாது என்று அவரது தம்பிக்கு சிலர் கொலை மிரட்டல்விடுத்தனர். ஆனால்அதற்கு மல்லிகா பயப்பட மாட்டார் என்று தம்பி கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

புடவை... ரொம்பப் புதுசா இருக்கே.. மல்லிகா வெட்கம்
முழுக்க புடவையில் நடிப்பது குறித்து மல்லிகா கூறுகையில், இந்த படத்தில், நான் நடிப்பதாக செய்திகள் வெளியானதும், ஏராளமான மிரட்டல்கள் வந்தன. ஆனாலும், அதை பொருட்படுத்தாமல் நடிக்கிறேன். படம் முழுவதும், புடவை அணிந்து நடிப்பது, ரொம்ப வித்தியாசமான அனுபவமாக உள்ளது. புடவை, எனக்கு, வசதியான உடையாக தெரியவில்லை என்கிறார், மல்லிகா.


Click it and Unblock the Notifications











