பட்டுச் சேலையில் பளிங்கு மாதிரி .. மல்லிகா ஷெராவத்தின் பாம்பாட்டம்.. பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!
சென்னை : மல்லிகா ஷெராவத் நடிக்கும் பாம்பாட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
Recommended Video
இப்படத்தில் ஜீவன், யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வைத்தியநாதன் ஃபிலிம் கார்டன் சார்பாக வி பழனிச்சாமி இப்படத்தை தயாரித்துள்ளார்.

புகழ் பெற்றார்
பாலிவுட் கவர்ச்சி நடிகையான இவர், மாடலிங் , தொலைக்காட்சி நிகழ்ச்சி என பலவற்றியில் பணிப்புரிந்துள்ளார். ஜீனா சிரஃப் மேரே லியே திரைப்படத்தின் மூலம் இந்தி திரைத்துறையில் அறிமுகமானார். இதையடுத்து, குவாஷிஷ் என்ற என்ற படத்தில் நடித்து புகழ் பெற்றார். இந்தி திரைப்படங்களைத் தவிர சீன மற்றும் தமிழ் மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.

நடன புயல்
மணிரத்னத்தின் இயக்கத்தில் இந்தியில் வெளியாக பின்னர் தமிழ், தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்ட குரு திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார். மையா .. மையா என்று சின்மயின் குரலில் மல்லிகா ஷெராவத்தின் இடை குலுக்கல் பாடலுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

குத்துப்பாட்டு
இந்த படத்தைத் தொடர்ந்து கமல் 10 வேடங்களில் கலக்கிய ததசவதாரம் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதைத்தொடர்ந்து ஓஸ்தி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடி உள்ளார்.

ஃபர்ஸ்ட் லுக்
இந்நிலையில் மல்லிகா ஷெராவத் தமிழில் பாம்பாட்டம் என்ற படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இப்படத்தை விசி வடிவுடையான் இயக்குகிறார். அம்பரிஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சரித்திரப் பின்னணி கொண்ட இப்படத்தில் ஹாரர், திகிலுட்டும் விஷயங்களும் இடம் பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications











