ஹீரோக்களுடன் படுக்கைக்கு செல்லாததால் படங்களில் இருந்து நீக்கினார்கள்: நடிகை பரபர பேட்டி
Recommended Video

மும்பை: ஹீரோக்களுடன் படுக்கைக்கு செல்ல மறுத்ததால் பல படங்களில் இருந்து தான் வெளியேற்றப்பட்டதாக நடிகை மல்லிகா ஷெராவத் தெரிவித்துள்ளார்.
பிரபல தயாரிப்பாளரின் மேனேஜர் ஒருவர் தன் காதில் முத்தம் கொடுக்க வந்ததுடன், தன்னிடம் அசிங்கமாக பேசியதாக பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் அண்மையில் தெரிவித்தார்.
இந்நிலையில் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்தும் படுக்கைக்கு அழைக்கப்படுவது குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,

ஹீரோக்கள்
படங்களில் எங்களுடன் நெருக்கமாக நடிக்கும் நீ நிஜத்தில் எங்களுடன் தனிமையில் இருந்தால் என்ன தப்பு என்று ஹீரோக்கள் என்னிடம் கேட்டுள்னர். அவர்களுடன் படுக்கைக்கு செல்ல மறுத்ததால் பல படங்களில் இருந்து என்னை வெளியேற்றிவிட்டனர்.

பெண்
நான் மற்றவர்கள் சொன்னது போன்று கேட்டு அட்ஜஸ்ட் செய்திருந்தால் பல படங்கள் கிடைத்திருக்கும். நான் தன்னம்பிக்கை மிக்க பெண். என்னால் அட்ஜஸ்ட் செய்ய முடியாது.

கவுரவம்
எனக்கு சுயமரியாதை உள்ளது. பட வாய்ப்புக்காக எல்லாம் அட்ஜஸ்ட் பண்ண மாட்டேன். இயக்குனர்கள் எனக்கு போன் செய்து இரவு 3 மணிக்கு வரச் சொன்ன சம்பவங்கள் நடந்துள்ளது.

இயக்குனர்கள்
இயக்குனர்கள், ஹீரோக்கள் செய்ததை வெளியே சொல்ல பயம். சொன்னால் நம் மீதே பழியை போட்டுவிடுவார்கள் என்று பயந்தேன். நம் சமூகத்தில் பாதிக்கப்பட்டவரை குறை சொல்லும் பழக்கம் உள்ளதே. அதனால் தான் இது குறித்து நான் முன்பே பேசவில்லை.

முதியவர்
மர்டர் படம் மூலம் என் சினிமா வாழ்க்கையை துவங்கினேன். அப்போது ஒரு மோசமான முதியவர் என்னை பாடாய் படுத்தினார். எனக்கு ஆதரவு அளிக்க யாருமே இல்லை. நான் தனியாக உணர்ந்தேன். அதை நினைத்தால் தற்போதும் வருத்தமாக உள்ளது என்றார் மல்லிகா.


Click it and Unblock the Notifications











