»   »  மல்லிகா ஷெராவத் Vs

மல்லிகா ஷெராவத் Vs

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை மல்லிகா ஷெராவத்க்கு எதிராக பாஜக இளைஞர் அணி போராட்டத்தில் குதித்துள்ளது.

மல்லிகா ஷெராவத் மத்தியப் பிரதேசத்துக்கு சென்றபோது, இளைஞர் பிரிவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து அவர்போகுமிடங்களில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் சமீபத்தில் ஜாக்கிசானுடன்,மித் என்ற கிளுகிளு படத்தில் நடித்துள்ளார்.

கவர்ச்சிக்கு முழு சுதந்திரம் தந்து நடித்துள்ள இவர் நடிப்பு, இந்திய கலாசாரத்துக்கு கேடாக உள்ளது என்று கூறி, பாரதிய ஜனதாகண்டித்து வருகிறது.

மத்தியப்பிரதேசம் போபாலுக்கு மல்லிகா வந்த போது, பாரதிய ஜனதாவின் இளைஞர் பிரிவினர், பெரும் ஆர்ப்பாட்டம்செய்தனர். அவர்களுக்கும், மல்லிகாவின் ரசிகர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.மோதலிலும், தடியடியிலும் சிலருக்கு காயமும் ஏற்பட்டது.


ஒரு பேஷன் கடையை திறந்து வைக்க போபால் வந்த மல்லிகாவை பாஜக இளைஞர் அணியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்செய்தனர். மல்லிகாவின் உருவ பொம்மையையும் எரித்தனர். ஆளும் கட்சியாக இருப்பதால், போலீசார், இளைஞர் பிரிவினரைஅப்புறப்படுத்தி, வேனில் ஏற்றி, சில நிமிடங்களில் விடுவித்து விட்டனர்.

இந்திய கலாசாரத்துக்கு எதிராக நடிகை மல்லிகா ஷெராவத் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இதை நாங்கள் பொறுத்துக்கொள்ள முடியாது. நம் கலாசாரம் பற்றி வெளிநாட்டினர் தவறாக நினைப்பர். அதனால், தொடர்ந்து அவரை எதிர்த்து போராட்டம்நடத்துவோம் என்று பாரதிய ஜனதா கட்சியினர் கூறுகின்றனர்.

இவர்களை தொடர்ந்து மும்பையில், சிவசேனாவும், மல்லிகாவுக்கு எதிராக போராட்டங்களை நடத்தும் என்று கூறப்படுகிறது.மல்லிகாவுக்கு போலீஸ் பாதுகாப்பு தர மராட்டிய மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil