அஜித்தின் 49 வது பர்த் டே..ட்விட்டரை தெறிக்கவிட்ட ரசிகர்கள்..வாழ்த்துகளை குவித்த மலையாள ஹீரோஸ்!
சென்னை: நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு, மலையாள நடிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
நடிகர் அஜித்தின் 49-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
அவர் பிறந்த நாள் தொடர்பாக இரண்டு மூன்று ஹேஷ்டேக்குகளை ரசிகர்கள் நேற்றில் இருந்தே டிரெண்டாக்கி வருகின்றனர்.

சினிமா பிரபலங்கள்
கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுனில் நாடு இருப்பதால், கொண்டாட்டங்கள் எதுவும் வேண்டாம் கூறியிருந்தார், அஜித். ஆனால், அதைக் கேட்காமல் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வெறித்தனமாகக் கொண்டாடி வருகிறார்கள். முன்னணி நடிகர்களில் இருந்து சாதாரண ரசிகர் வரை, சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் காலையில் இருந்தே தெரிவித்து வந்தனர்.

வாழ்த்துகள்
இதனால் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள், அஜித் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியால் நிறைந்துள்ளது. இந்நிலையில் தமிழ் தவிர மற்ற மொழி நடிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். குறிப்பாக மலையாள நடிகர்கள் அதிகமானோர், அவருக்கு வாழ்த்துக்களைக் கூறியுள்ளானர்.

நடிகர் சுரேஷ் கோபி
நடிகர் சுரேஷ் கோபி, அஜித்துடன் தினா படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினார். அப்போதிருந்து இருவரும் நட்பை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது பேஸ்புக்கில் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார், சுரேஷ் கோபி.

நிவின் பாலி
பிரபல மலையாள இளம் ஹீரோ, நிவின் பாலியும் அஜித்துடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு, வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மற்றொரு மலையாள ஹீரோ, ஜெயசூர்யா, நடிகர்கள் விஜய்பாபு, பத்மசூர்யா உட்பட பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். கேரள மாநில அஜித் ரசிகர்கள் சிறப்பு பிறந்த நாள் டிசைனையும் உருவாக்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











