'அவன் என் முகத்தைதான் கத்தியால் சிதைக்க முயன்றான்..' காயமடைந்த டிவி நடிகைக்கு பிளாஸ்டிக் சர்ஜரி!

By

மும்பை: திருமணத்துக்கு மறுத்ததால், கத்தியால் குத்தப்பட்ட டிவி நடிகைக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட இருக்கிறது.

நடன இயக்குநர் ராபர்ட் நடித்த படம், ஒண்டிக்கு ஒண்டி. இதில் ஹீரோயினாக நடித்திருப்பவர் மால்வி மல்ஹோத்ரா.

மும்பையை சேர்ந்த இவர், பிரபல மாடல். ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

வெர்சோவா பகுதி

வெர்சோவா பகுதி

இந்தியில் உடான் என்ற டிவி தொடரில் அறிமுகமான இவர், தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார். மும்பையில் அந்தேரி பகுதியில் வசித்து வரும் மால்வி, திங்கட்கிழமை , இரவு 9 மணியளவில் அந்தேரி வெர்சோவா பகுதியில் உள்ள காபி ஷாப் ஒன்றுக்கு சென்றார். அவர் வீட்டின் அருகில் இருக்கிறது, இந்த காபி ஷாப்.

ஏன் பேச மறுக்கிறாய்?

ஏன் பேச மறுக்கிறாய்?

அங்கு டிவி நிகழ்ச்சி ஒன்றுக்காக ஒளிப்பதிவாளர் ஒருவரை சந்தித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது, வேகமாக வந்த கார் ஒன்று அவர் அருகில் நின்றது. அதிலிருந்த இளைஞர், ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய் என்று கேட்டுள்ளார். பேசாமல் போய்விடு என்றார் நடிகை.

கத்தியால் குத்திவிட்டு

கத்தியால் குத்திவிட்டு

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் காரில் இருந்து இறங்கிய அந்த இளைஞர், மால்வியின் வயிறு மற்றும் கைகளில் கத்தியால் குத்திவிட்டு காரில் தப்பினார். நடிகை அலறியதை அடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பேஸ்புக் பழக்கம்

பேஸ்புக் பழக்கம்

இதுகுறித்து போலீஸ் விசாரணையில், திருமணத்திற்கு மறுத்த ஆத்திரத்தில் யோகேஷ் மகிபால் சிங் என்பவர், மால்வியை குத்தியது தெரிய வந்தது. மால்விக்கும், மகிபால் சிங்கிற்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன் பேஸ்புக் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் திருமணம் செய்து கொள்ளுமாறு, நடிகையை வற்புறுத்தி உள்ளார்.

குத்தப்பட்ட சம்பவம்

குத்தப்பட்ட சம்பவம்

மால்வி மறுப்பு தெரிவித்துள்ளார். அந்த ஆத்திரத்தில் அவரை கத்தியால் குத்தியது தெரிய வந்தது. வெர்சோவா போலீசார் வழக்குப் பதிவு செய்து மகிபால் சிங்கை தேடி வந்தனர். அவர் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது. அவரை உடனடியாக கைது செய்யவில்லை என்று போலீசார் கூறினர். டி.வி. நடிகை கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஊட்டியில் சந்தித்தேன்

ஊட்டியில் சந்தித்தேன்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை மால்விக்கு பிளாஷ்டிக் சர்ஜரி செய்யப்பட இருக்கிறது. இதுபற்றி நடிகை மால்வி கூறும்போது, 'யோகேஷை மூன்று முறை நேரில் சந்தித்து இருக்கிறேன். முதல்முறை கடந்த ஜனவரி மாதம், தமிழ் சினிமா படப்பிடிப்புக்காக, ஊட்டியில் இருந்தபோது சந்தித்தார்.

அதற்கு வாய்ப்பில்லை

அதற்கு வாய்ப்பில்லை

அப்போது இசை ஆல்பத்தில் நடிக்கக் கேட்டார். அடுத்த சந்திப்பில், என்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் சொன்னார். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை, ஒரு முறைதான் சந்தித்து இருக்கிறோம், அதற்குள் காதலா என்று சொன்னேன். பிறகு சந்திக்கவில்லை. தொடர்ந்து போனில் மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தார்.

பிரச்னை வேண்டாம்

பிரச்னை வேண்டாம்

நான் பதில் சொல்வதில்லை. ஒரு முறை என் வீட்டுக்கு வெளியே 10 மணி நேரம் காத்திருந்தான். தயவு செய்து இதுபோன்று செய்யாதீர்கள் என்று கண்டிப்பாக சொன்னேன். இதுபற்றி வீட்டில் நான் சொல்லவில்லை. தேவையில்லாமல் பிரச்னை வேண்டாம் என்பதற்காகவே சொல்லவில்லை.

ஆழமாக காயம்

ஆழமாக காயம்

அவன் என் முகத்தில்தான் கத்தியால் குத்தி காயப்படுத்த முயன்றான். நான் கைகளால் தடுத்தேன். இதில் ஒரு கையில் ஆழமாக காயம் ஏற்பட்டு விட்டது. மற்றொரு கையிலும் காயமடைந்தேன். பிறகு வயிற்றில் குத்திவிட்டு தப்பிவிட்டான். நான் ரத்தவெள்ளத்தில் விழுந்து விட்டேன். இவ்வாறு மால்வி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X