குற்றமுள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும் மேடம்: தமிழிசைக்கு துருவங்கள் 16 இயக்குனர் பதில் #Mersal
சென்னை: குற்றமுள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும் என்று மெர்சலை விமர்சித்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதில் அளித்துள்ளார் துருவங்கள் 16 இயக்குனர் கார்த்திக் நரேன்.
மெர்சல் படத்தில் வரும் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். அந்த காட்சிகளை நீக்கவும் பாஜக கெடு விதித்தது.

மருத்துவர்களை படத்தில் கிண்டல் செய்திருப்பது வேதனை அளிக்கிறது. ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஊழல்வாதிகள் என்று காட்டியுள்ளனர். நடிகர்கள் கோடிகளில் சம்பளம் வாங்கும்போது டாக்டர்கள் மட்டும் ஐந்து ரூபாய் வாங்க வேண்டுமா என்று தமிழிசை ட்வீட்டினார்.
இதை பார்த்த துருவங்கள் 16 பட இயக்குனர் கார்த்திக் நரேன் பதில் அளித்திருப்பதாவது,
மேடம், குற்றமுள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும். சில அரசியல்வாதிகள் நடிகர்களை விட சம்பாதிப்பது இல்லையா? அவர்களை போய் கேட்க வேண்டியது தானே என்றார்.


Click it and Unblock the Notifications











