முதலிரவை கெடுத்த மாமா.. புலம்பித் தள்ளிய புது மாப்பிள்ளை.. ராகுல் வைத்தியாவுக்கு இப்படி ஆகிடுச்சே?

மும்பை: பிரபல பாலிவுட் பாடகர் ராகுல் வைத்தியா மற்றும் நடிகை திஷா பார்மரின் முதலிரவை மாமா பாழாக்கி விட்டதாக ராகுல் வைத்தியா பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

ஜூலை 16ம் தேதி வெள்ளிக்கிழமை பாலிவுட் நடிகை திஷா பார்மருக்கும் பிரபல இந்தி பாடகர் ராகுல் வைத்தியாவுக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து சனிக்கிழமை நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தனது முதலிரவை நடக்க விடாமல் குடும்பத்தினர் எப்படி புகுந்து கலாய்த்தனர் என்பது குறித்து மேடையிலேயே புது மாப்பிள்ளை புலம்பித் தள்ளி இருக்கிறார்.

கிராண்ட் ஹயாத்தில்

கிராண்ட் ஹயாத்தில்

மும்பையில் உள்ள கிராண்ட் ஹயாத் நட்சத்திர ஹோட்டலில் பாடகர் ராகுல் வைத்தியா மற்றும் டிவி நடிகை திஷா பார்மரின் திருமணம் நண்பர்கள் மற்றும் சொந்தங்கள் சூழ கோலாகலமாக நடைபெற்றது. நீண்ட நாட்களாக காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொண்டது பாலிவுட் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியது.

திருமண புகைப்படங்கள்

திருமண புகைப்படங்கள்

வெள்ளை நிற குர்த்தா அணிந்து மாப்பிள்ளை ராகுல் வைத்தியா கூலாகவும் சிகப்பு கலர் லெஹங்கா அணிந்து மணப்பெண் திஷா பார்மர் கலகலப்பாகவும் இருக்கும் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. ரசிகர்கள் முதல் பாலிவுட் பிரபலங்கள் வரை பலரும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

முதலிரவை கெடுத்த மாமா

முதலிரவை கெடுத்த மாமா

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய பாடகர் ராகுல் வைத்தியா தனது முதலிரவை குடும்பத்தினர் எப்படி பிராங்க் பண்ணி கெடுத்தனர் என்பதை பப்ளிக்காக மைக் பிடித்து அனைத்து சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக மாமாஜி பண்ண வேலை தான் ஹைலைட்.

அதிகாலை 3 மணிக்கு

அதிகாலை 3 மணிக்கு

நண்பர்கள் மற்றும் சகோதரர்களுடன் பேசி விட்டு நானே 12 மணிக்குத் தான் ஃபர்ஸ்ட் நைட் ரூமிற்குள் நுழைந்தேன். அதிகாலை 3 மணிக்கு ஏதோ ஜாக்கெட் எடுக்க வேண்டும் என மாமாஜி ஒருத்தர் கதவை தட்டி அறைக்குள் புகுந்தவர் காலை 8 மணி வரை அங்கேயே பேசி மொக்கைப் போட்டு என் முதலிரவை வீணாக்கி விட்டார் என புலம்பித் தள்ளிய வீடியோ வைரலாகி வருகிறது.

பொண்ணு அப்செட்

பொண்ணு அப்செட்

சொந்தங்கள் சூழ்ந்து இப்படி தங்களது முதலிரவை வீணாக்கியதை பார்த்து கடுப்பான திஷா இன்னும் வேற யாராவது நம்ம ரூமில் இருக்காங்களா என்று கேட்டு விட்டார் என்றும் திருமண வரவேற்பு விழாவில் பேசி அனைவரையும் கலகலப்பாக்கி விட்டார் ராகுல் வைத்தியா.

உச்சுக் கொட்டும் ரசிகர்கள்

அடப்பாவி மாமா போயும் போய் முதலிரவை கெடுத்துட்டியே என்று ஏகப்பட்ட ரசிகர்கள் ராகுல் வைத்தியாவின் நிலையை பார்த்து பரிதாபப்பட்டு மாமாவை திட்டி வருகின்றனர். ராகுல் வைத்தியாவுக்கு முதலிரவு நடக்கலையாம் என ட்ரோல்களும் சோஷியல் மீடியாவில் பறந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X