தனி வார்டில் கொரோனாவுக்கு சிகிச்சை.. வெளிநாட்டில் இருந்து வந்த பிரபல இயக்குனர் மகன் டிஸ்சார்ஜ்!
கொச்சி: வெளிநாட்டில் இருந்த பிரபல இயக்குனர் மகன், கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளார்.
மம்மூட்டி நடித்து சமீபத்தில் வெளியான படம், 'மாமாங்கம்'. 17 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதையை கொண்ட படம் இது.
இதில், பிராச்சி தெஹ்லன், பிராச்சி தேசாய், இனியா, மாளவிகா மேனன், கனிகா உட்பட பலர் நடித்துள்ளனர்.

பாரிஸில் இருந்து
மலையாளத்தில் உருவான இந்த படம், தமிழ், தெலுங்கு, இந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. படத்தை எம்.பத்மகுமார் இயக்கினார். இவர் வாஸ்தவம், கேரளா கஃபே, சிகார், ஜோசப் உட்பட பல படங்களை மலையாளத்தில் இயக்கியுள்ளார். இவர் மகன், தனது நண்பருடன் கடந்த மார்ச் மாதம் பாரிஸ் நகரில் வந்து கேரளா திரும்பினார்.

குணமடைந்தார்
கொரோனா வைரஸ் பாதிப்பு அவர்களுக்கு இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். எர்ணாகுளம் கலாமச்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்கள், இப்போது குணமடைந்துள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு 14 நாட்கள் ஆனதை அடுத்து, சிகிச்சை முடிந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளனர்.

முதலமைச்சர்
இதை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ள இயக்குனர் பத்மகுமார், என் மகன் ஆகாஷூம் அவர் நண்பர் எல்தோ மாத்யூவும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர் என்று தெரிவிள்ளார். அதில், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், சுகாரத்துறையினர், மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், கேரள சுகாதரத்துறை அமைச்சர் சைலஜா, எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

கடும் பாதிப்பு
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், இப்போது உலகையே மிரட்டிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் ஏராளமானார் உயிரிழந்துள்ளனர். இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகள் கடுமையானப் பாதிப்பை சந்தித்துள்ளன.

வைரஸை கட்டுப்படுத்த
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வீட்டுக்குள் அடைந்து கிடக்கின்றனர். இந்த ஊரடங்கு இந்த மாதம் முழுவதும் நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.


Click it and Unblock the Notifications











