3 நாளுக்குப் பிறகு வேலையை காட்டிய தமிழ் ராக்கர்ஸ்... மாமாங்கமும் வந்தாச்சாம்!

By

சென்னை: மம்மூட்டி நடிப்பில் மெகா பட்ஜெட்டியில் உருவாகியுள்ள மாமாங்கம் படம் ஆன்லைனில் திருட்டுத்தனமாக லீக் ஆகியுள்ளது.

மம்மூட்டி நடித்துள்ள மலையாள படம், 'மாமாங்கம்'. 17 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதையான இதில், பிராச்சி தேஹ்லன், பிராச்சி தேசாய், இனியா, மாளவிகா மேனன், கனிகா உட்பட பலர் நடித்துள்ளனர்.

Mamangam leaked online; Cyberdome initiates action

முதலில், இந்தப் படத்தை சஜீவ் பிள்ளை இயக்கினார். அவருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, ஷூட்டிங் தள்ளிப் போனது. பின்னர் அவர் மாற்றப்பட்டு எம்.பத்மகுமார் இயக்கினார்.

காவ்யா பிலிம் கம்பெனி சார்பில் வேணு குணப்பிள்ளி தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. தமிழ்ப் பதிப்புக்கு இயக்குனர் ராம் வசனம் எழுதியுள்ளார். படம் கடந்த 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

தயாரிப்பாளர் வேணு குணப்பிள்ளி, ஒரே நாளில் ரூ.23 கோடி வசூலித்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் படம் ரிலீஸ் ஆகி மூன்று நாட்களுக்குப் பின், ஆன்லைனில் திருட்டுத்தனமாக லீக் ஆகியுள்ளது. தமிழ்ராக்கர்ஸ் தங்கள் வேலையை காட்டியுள்ளனர். இதுபற்றி கேரள போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X