மாமனிதன் சென்சார் அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர் சீனு ராமசாமி!

சென்னை : இயக்குனர் சீனுராமசாமி விஜய் சேதுபதி நான்காவது முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் மாமனிதன்.

கிராமத்து கதை களத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இளையராஜா,கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என மூவரும் இசையமைத்துள்ளனர்.

ரிலீஸுக்கு தயாராக இருந்த இப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக சில தகவல்கள் வெளிவந்த நிலையில் இப்பொழுது மாமனிதன் சென்சார் பற்றிய முக்கிய தகவல் ஒன்றை இயக்குனர் சீனுராமசாமி வெளியிட்டுள்ளார்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

இப்பொழுது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் விஜய்சேதுபதியை ஹீரோ மெட்டீரியலாக மாற்றியவர் இயக்குனர் சீனு ராமசாமி. முதல் படம் கூடல் நகருக்கு பிறகு இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று. இதில் விஜய் சேதுபதியை ஹீரோவாக ஆக்கி அழகு பார்த்தவர். தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணைந்து இடம் பொருள் ஏவல், தர்மதுரை உள்ளிட்ட படங்களை இயக்கி வந்தார்.

ஜோடியாக காயத்ரி சங்கர்

ஜோடியாக காயத்ரி சங்கர்

இப்போது நான்காவது முறையாக விஜய் சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணி இணைந்து மாமனிதன் திரைப்படம் உருவாகியுள்ளது. கிராமத்து மண் வாசனையுடன் படங்களை இயக்கி வரும் இவர் இந்த படத்தையும் கிராமத்து கதைக்களத்தில் இயக்கியுள்ளார் . விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி சங்கர் நடித்துள்ளார்.

அதிகாரப்பூர்வமாக

அதிகாரப்பூர்வமாக

இசைஞானி இளையராஜா,யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா என மூவரும் இப்படத்தில் இசையமைப்பாளர்களாக பணியாற்றி இருக்க பாடல்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது. பெரும் எதிர்பார்ப்பில் இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கையில் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளதாக சில தகவல்கள் உலா வந்தன ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை.

விரைவில் உங்கள் பார்வைக்கு

விரைவில் உங்கள் பார்வைக்கு

இந்த நிலையில் மாமனிதன் சென்சார் அப்டேட்டை பற்றிய முக்கிய தகவல் ஒன்றை சீனுராமசாமி பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் "மாமனிதன் திரைப்படம் தணிக்கைக்கு சமர்ப்பிக்க தயாராகிவிட்டது . விரைவில் உங்கள் பார்வைக்கு வரும் "என்ற அட்டகாசமான அப்டேட்டை இப்போது வெளியிட்டுள்ளார் . சீனு ராமசாமி விஜய்சேதுபதி கூட்டணி நான்காவது முறையாக இதில் இணைவதால் தமிழ் ரசிகர்களிடம் அதிக கவனத்தை இப்படம் பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X