Mari Selvaraj - மாமன்னனில் ஃபகத் கேரக்டருக்குள் இருக்கும் முரண்.. மறைமுகமாக உணர்த்திய மாரி செல்வராஜ்?

சென்னை: Fahadh Faasil Birthday (ஃபகத் பாசில் பிறந்தநாள்) ஃபகத் பாசிலுக்கு மாமன்னன் இயக்குநர் மாரி செல்வராஜ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை எடுத்திருக்கிறார் ஃபகத் பாசில். அலட்டல் இல்லாமல் தனது கண்களை வைத்துக்கொண்டே உடன் நடிப்பவர்களை தாண்டி ஸ்கோர் செய்துவிடும் வல்லமை ஃபகத்துக்கு இருக்கிறது. இதன் காரணமாக பல மொழிகளிலும் அவரால் தடம் பதிக்க முடிகிறது. அவருக்கென்று பெண் ரசிகைகள் ஏராளமானோர் இருக்கின்றனர். தெலுங்கில் புஷ்பா படத்தில் பன்வர் சிங் செகாவாட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது புஷ்பா 2விலும் நடித்திருக்கிறார்.

Mamannan director Mari Selvaraj has wished Fahadh Faasil Birthday

தமிழில்: அதேபோல் தமிழில் வேலைக்காரன் படத்தில் அறிமுகமான அவர் அடுத்ததாக விக்ரம் படத்தில் நடித்திருந்தார். கமலிடம் அவர் பேசும் இடைவேளை காட்சி உள்ளிட்ட பல காட்சிகளில் அமர் கதாபாத்திரமாக பின்னி பெடலெடுத்தார். வேலைக்காரன் பெற்றுத்தராத முகவரியை விக்ரம் அவருக்கு தமிழில் பெற்றுத் தந்தது எனலாம்.

மாமன்னன் ஃபகத்: அவரது கரியர் பெஸ்ட்டாக மாமன்னன் படம் அமைந்திருக்கிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான படத்தில் ரத்னவேல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சாதி திமிர் உள்ளவராக எந்த அலப்பறை போட்டு கத்தி எதுவும் பேசாமல் சின்ன சின்ன கண் அசைவுகளாலும் தனது அசுரத்தனமாக நடிப்பாலும் மிரட்டியிருந்தார்.

பிறந்தநாள் வாழ்த்து: இந்நிலையில், ஃபகத் பாசில் தனது ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில் மாரி செல்வராஜ் தெரிவித்திருக்கும் பிறந்தநாள் வாழ்த்தில், "வணக்கம் பகத் சார்!!! உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அந்த இரண்டு கண்களை வைத்துதான் என் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன்.

நேரெதிர் வாழ்க்கை முறை: ஒரு கண்ணில் பல தலைமுறைகளாக சொல்லிக்கொடுக்கப்பட்ட வாழ்க்கைமுறை சரி என்ற நம்பிக்கையை தீர்க்கமாக வையுங்கள் என்றேன். மற்றொரு கண்ணில் புதிய தலைமுறைகள் முளைத்து வந்து கேட்கும் வாழ்வியல் முரணுக்கான ஆக்ரோஷ கேள்விகளையும் குழப்பங்களையும் வையுங்கள் என்றேன். மிகச்சரியாக இரண்டு கண்களிலும் இரண்டு நேரெதிர் வாழ்வை வைத்து என் படம் முழுக்க அப்படியே பயணித்தீர்கள்.

அம்பேத்கர் குரல்: இறுதியாக இரண்டு கண்களையும் மூட சொன்னேன். ஏனென்று கேட்காமல் மூடினீர்கள். உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் டாக்டர்.அம்பேத்கரின் குரலை ஒங்கி ஒலிக்க விட்டேன். அவ்வளவுதான் உடல் சிலிர்த்து நீங்கள் ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்ட அந்த நொடி தீரா பரவசத்தோடு சொல்கிறேன்" என்றார்.

இந்த வாழ்த்தை பார்த்த பலரும், ஒரு கண்ணில் பல தலைமுறைகளாக சொல்லிக்கொடுக்கப்பட்ட வாழ்க்கைமுறை சரி என்ற நம்பிக்கையை தீர்க்கமாக வையுங்கள் என்றேன். மற்றொரு கண்ணில் புதிய தலைமுறைகள் முளைத்து வந்து கேட்கும் வாழ்வியல் முரணுக்கான ஆக்ரோஷ கேள்விகளையும் குழப்பங்களையும் வையுங்கள் என்றேன். மிகச்சரியாக இரண்டு கண்களிலும் இரண்டு நேரெதிர் வாழ்வை வைத்து என்ற வரிகளை குறிப்பிட்டு;

Mamannan director Mari Selvaraj has wished Fahadh Faasil Birthday

சாதி திமிர் பிடித்த ஒருவர் முந்தைய தலைமுறையிடம் ஆக்ரோஷமாகவும், அடுத்த தலைமுறையிடம் தன்னுடைய அரசியல் லாபத்திற்காக குள்ளநரித்தனமாகவும்; தனது அதிகாரத்தை அசைத்து பார்த்தவரை அழிக்க தன்மானத்தை இழப்பதற்கும் தயாராக இருப்பார் போன்ற காட்சிகளை வைத்திருந்தார். எனவே இந்தப் படத்தில் ஃபகத் பாசிலை முழுமையான மற்றும் ஆக்ரோஷமான வில்லனாக காட்டவில்லை. அந்த கேரக்டருக்குள் ஏகப்பட்ட முரண்கள் இருந்தன என்பதை இந்த வாழ்த்தின் மூலம் மாரி செல்வராஜ் உணர்த்தியிருக்கிறார் என கூறிவருகின்றனர்.

ட்ரெண்டிங்கில் ஃபகத்: முன்னதாக மாமன்னன் படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியானதை அடுத்து ரத்னவேலு கதாபாத்திரத்தின் வீடியோக்களில் பல பாடல்களை ஒட்டி தங்கள் இஷ்டத்துக்கு பகிர்ந்துவந்தனர் சிலர். தற்போது ஃபகத் முழுமையான வில்லனே இல்லை என மாரி செல்வராஜ் மறைமுகமாக சொல்லியிருக்கிறார் அதைக்கூட புரிந்துகொள்ளாமல் பலர் அவரை தங்களது ஆதர்சமாக நினைத்து சில்லறைகளை சிதறவிட்டார்களே என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X