காரில் லிஃப்ட் கொடுத்து கதவையும் திறந்துவிட்ட மமதா: காலை தொட்டு கும்பிட்ட ஷாருக்கான்
கொல்கத்தா: தன்னை விமான நிலையத்தில் வந்து கொண்டுவிட்டு கார் கதவையும் திறந்துவிட்ட மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜியின் காலை தொட்டு கும்பிட்டார் ஷாருக்கான்.
கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கொல்கத்தாவுக்கு சென்றார். மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி அழைத்ததின்பேரில் அங்கு சென்றார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவர் விமான நிலையத்திற்கு கிளம்பினார்.

கார்
ஷாருக்கானுக்கு விமானத்திற்கு நேரமாகிறது என்றதால் மமதா தனது ஹுன்டாய் சான்ட்ரோ காரில் விமான நிலையத்திற்கு லிஃப்ட் கொடுத்தார். ஷாருக்கான் அந்த காரில் தான் சென்றார்.

ஏர்போர்ட்
காரை டிரைவர் ஒருவர் ஓட்ட அவர் அருகில் மமதா அமர்ந்திருக்க பின் சீட்டில் ஷாருக்கான் இருந்தார். விமான நிலையத்தை அடைந்தவுடன் மமதா முதல் ஆளாக கீழே இறங்கி ஷாருக்கானுக்காக கார் கதவை திறந்துவிட்டார்.
வீடியோ
காரில் இருந்து வெளியே வந்த ஷாருக்கான் கொஞ்சமும் தயங்காமல் தனக்காக கதவை திறந்துவிட்ட மமதாவின் காலை தொட்டு ஆசி பெற்றார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

முதல்வர்டா
மமதா பானர்ஜி எங்க முதல்வர்டா. ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தாலும் குட்டி காரில் தான் பயணம் செய்கிறார். தலைக்கனம் இல்லாதவர் என்று மேற்கு வங்க மக்கள் பெருமைப்படுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











