விஜயை பார்த்து நடுங்கி ஓடிய நடிகை... பிரேமலு பட நடிகை ஓபன் டாக்!

சென்னை: மலையாள பட நடிகை மமிதா பைஜூ பிரேமலு படத்தின் மூலம் இந்திய அளவில் டிரெண்டிங் ஆனார். அப்படத்தில் அவரது நடிப்பு மற்றும் குறும்புத்தனங்களும் பெரிதளவில் பேசப்பட்டன. பிரேமலு படத்தின் மூலம் தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. விஜயுடன் ஜனநாயகன் படத்தில் நடித்து வரும் அவர், விஜய் சாரை பார்த்ததும் பதற்றம் அடைந்துவிட்டேன், என் கைகள் நடுங்கின என்று பூரிப்புடன் மமிதா பைஜூ தெரிவித்துள்ளார்.

பிரேமலு படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யாவுடன் இணைந்து வணங்கான் படத்தில் நடித்தார். பின்னர் அப்படத்தில் இருந்து சூர்யா தனிப்பட்ட காரணங்களால் விலகினார். பின்னர், மமிதா பைஜூவும் விலகினார். ஆனால், பாலா நடிகர்களை அடிப்பதாகவும் பரவலாக பேசப்பட்டது. இதனால் அப்படத்தில் இருந்து மமிதா பைஜூ விலகியதாக தெரிவிக்கப்பட்டது.

Mamitha Baiju Vijay Vijay 69

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை: வணங்கான் படத்தில் வில்லடிச்சா மாடன் பாடலில் வாத்தியம் ஒன்றை வாசித்தபடி இயக்குநர் பாலா நடனமாட சொன்னார். அதற்கு நான் தயாராகவில்லை. பல டேக்குகள் வாங்கினேன். ஆத்திரமடைந்த பாலா என்னை முதுகில் அடித்தார் என மமிதா பைஜூ தெரிவித்தார். சர்ச்சைகள் எழுந்த நிலையில், மீண்டும் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பாலா சார் என்னை அடிக்கவில்லை, என்னை நேர்காணல் எடுத்தவர்கள் தவறாக சித்தரித்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.

வணங்கான் படத்தில் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் எந்தவித தொந்தரவும் ஏற்படவில்லை என மமிதா பைஜூ விளக்கம் அளித்திருந்தார். இதனைத்தொடர்ந்து இயக்குநர் ஹெச் வினோத் இயக்கும் நடிகர் விஜய் 69 படத்தில் நடிக்கை மமிதா பைஜூ ஒப்பந்தமானார். படத்தின் பூஜையின் போது விஜயுடன் சேர்ந்து மமிதா பைஜூ எடுத்துக்காெண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.

விஜய் 69 படத்தில் மமிதா பைஜூ: துறுதுறுவென இருக்கும் நடிகை மமிதா பைஜூ விஜய்யை பார்த்து பயந்ததாக தெரிவித்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பட புரோமோ நிகழ்ச்சி அல்லது கல்லூரி விழாக்களில் கலந்துகொள்ளும் நடிகை மமிதா பைஜூ துள்ளலான நடனம், அல்லது ரசிகர்களை கவரும் வகையில் செய்யும் சேட்டைகள் ரசிக்கும்படியே இருக்கும். ஜனநாயகன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்து வருகிறார். விஜயின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் படமாக இருக்கும் எனவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

விஜயை பார்த்து நடுங்கினேன்: அண்மையில் நடிகை மமீதா பைஜூ அளித்த பேட்டியில், விஜய் சாரை நேரில் பார்த்ததும் பதற்றமடைந்தேன். அவரை பார்த்து ஹாய் சார் என்று மட்டுமே கூறினேன். அதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை, கைகள் நடுக்கத்துடன் இருந்தது. இதை தெரிந்து கொண்ட விஜய் சார், என் அருகில் வந்து மெதுவாக ஹாய் மா எனக் கூறி கை கொடுத்து அரவணைத்து கொண்டார். அந்த நிமிடங்களை என்னால் மறக்க முடியவில்லை. அதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. விஜய் ரசிகையாக அந்த உணர்வை வெளிப்படுத்த முடியவில்லை என பூரிப்புடன் தெரிவித்தார்.

ஜனநாயகன் படப்பிடிப்பு: விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, மமிதா பைஜூ ஆகியோர் நடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X