கெட்டவனாக நடிக்கும் மம்முட்டி... மலையாளத்திற்கும் தொற்றிய வில்லன் கேரக்டர் மோகம்!

கொச்சி : நடிகர் மம்முட்டி மலையாள படவுலகின் முன்னணி கதாநாயகனாக உள்ளார். 70 வயதானாலும் தொடர்ந்து ஹீரோவாக நடித்துவரும் இவரின் நடிப்பில் தற்போது சிபிஐ 5 தி பிரேய்ன் படம் ரிலீசாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் முந்தைய பாகங்களில் இருந்ததை போன்றே இந்தப் படத்திலும் காணப்படுகிறார் மம்முட்டி.

நடிகர் மம்முட்டி

நடிகர் மம்முட்டி

நடிகர் மம்முட்டி மலையாள படவுலகின் முன்னணி நாயகன். 70 வயதானாலும் இளம் நடிகர்களுக்கு ஸ்டப் கொடுக்கும்வகையில் இவர் தனது உடல்கட்டை பராமரித்து வருகிறார். தொடர்ந்து கதாநாயகன் கேரக்டர்களில் நடித்துவரும் இவர், கேரக்டர் ரோல்களிலும் நடித்து வருகிறார்.

சிபிஐ 5 தி பிரெய்ன்

சிபிஐ 5 தி பிரெய்ன்

கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது நடிப்பில் சிபிஐ 5 தி ப்ரெயின் படம் ரிலீசாகியுள்ளது. கடந்த 35 ஆண்டுகளாக இந்தப் படத்தின் பாகங்கள் வெளியாகி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. முதல் 4 பாகங்களை இயக்கிய கே மதுவே இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார்.

17 ஆண்டுகளுக்கு பிறகு 5வது பாகம்

17 ஆண்டுகளுக்கு பிறகு 5வது பாகம்

குறிப்பாக 4வது பாகம் வெளியாகி 17 ஆண்டுகள் கழித்து இந்தப் படம் ரிலீசாகியுள்ளது. படத்தை மிகவும் த்ரில்லிங்காக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இயக்கியுள்ளார் மது. படத்தின் சிறப்பான திரைக்கதை படத்திற்கு மேலும் வலிமையை சேர்த்துள்ளது.

வில்லனாக மம்முட்டி

வில்லனாக மம்முட்டி

தற்போது புழு என்ற படத்தில் வில்லன் வேடத்தை ஏற்றுள்ளார் நடிகர் மம்முட்டி. படத்தில் தன்னுடைய வில்லன் கேரக்டர் வலுவாக உள்ளதா என்று கேட்டறிந்த பின்பே இந்த கேரக்டரை மம்முட்டி ஏற்றுள்ளார். படத்தில் டீன் ஏஜ் பையனுக்கு அவர் அப்பாவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாகியுள்ளார் பார்வதி.

13ம் தேதி ரிலீஸ்

13ம் தேதி ரிலீஸ்

படம் வரும் 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. படத்தை பெண் இயக்குநர் ரதீனா என்பவர் இயக்கியுள்ளார். படத்திற்கு கதை எழுதியுள்ள வர்ஷாத், மம்முட்டி நடித்துவந்த உண்ட என்ற படப்பிடிப்பின்போது இந்தக் கதையை கூறி ஓகே வாங்கியுள்ளார். படத்தில் வில்லனாக இருந்தாலும் மிகவும் வலுவான கேரக்டரில் மம்முட்டி நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மெயின் கேரக்டர்

மெயின் கேரக்டர்

மேலும் படம் முழுவதும் அவரது பார்வையில்தான் படம் நகர்கிறதாம். இதையடுத்தே இந்தப் படத்தில் நடிக்க மம்முட்டி ஓகே சொன்னதாக தெரிகிறது. நமது ஹீரோக்கள்தான் வில்லன் வேடத்தில் நடிக்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். விஜய் சேதுபதி, அர்ஜூன், கார்த்திக், அர்விந்த்சாமி என கோலிவுட்டில் வில்லனாக நடித்துவரும் ஹீரோக்கள் அதிகம்.

வில்லன் கேரக்டர் மோகம்

வில்லன் கேரக்டர் மோகம்

அந்தவகையில் தற்போது மல்லுவுட்டிலும் இந்தக் கலாச்சாரம் பரவியுள்ளது. மலையாளத்தின் முன்னணி ஹீரோவான மம்முட்டி தற்போது வில்லனாக நடித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஹீரோ என்ற ஒரு இமேஜிக்குள் மாட்டிக் கொண்டால் நாம் நினைக்கும் கதாபாத்திரங்களில் நடிக்க முடியாது என்பது இதற்கான காரணமாக விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X