twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மம்மூட்டி நடிக்கும் வரலாற்று காவியம் மாமாங்கம்-மறைக்கப்பட்ட மாவீரனின் கதை

    |

    சென்னை: ஒரு போர் வீரனின் கதையை சொல்லும் மாமாங்கம் என்னும் வரலாற்று திரைப்படத்தில் மம்மூட்டி நடித்து வருகிறார். 1680ஆம் ஆண்டுகளின் காலகட்டப் பின்னணியில் 12 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வரும் புகழ்பெற்ற மாமாங்கம் திருவிழாவை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது. மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் இப்படத்தில் மலையாள உச்ச நட்சத்திரங்களான உன்னி முகுந்தன், சித்திக், மணிக்குட்டன், மணிகண்டன் ஆச்சாரி, தருண் அரோரா, பிரச்சி தெஹ்லான், கனிகா, அனு சித்தாரா, இனியா ஆகியோருடன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

    போர் வீரனின் கதையை பிரமாண்டமாக சொல்லும் மம்மூட்டியின் மாமாங்கம் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. மலையாளத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழ் பதிப்பில் தனது கேரக்டருக்கு குரல் கொடுத்துள்ளார் நடிகர் மம்மூட்டி.

    Mammootty Acts in Mamangam Historical Film

    இது பற்றி இயக்குநர் பத்மகுமார் கூறும்போது, மம்மூட்டி சாரின் பிரபல்யம், ரசிகர் வட்டம் மலையாள எல்லைகளை கடந்தது. இந்திய அளவில் மிகச்சிறந்த நடிகராக போற்றப்படுபவர். தமிழிலும் அவர் சில வெற்றிப் படங்களை தந்து பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.

    தமிழ்ப்படங்களில் அவரது தமிழ் உச்சரிப்பு மிகத்தெளிவாக, தமிழ் மண் மனம் மாறாததாக இருக்கும். தமிழர்கள் போன்றே பேசும் அவரது தமிழ் மொழிவன்மை, மலையாள நடிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தும்.

    மாமாங்கம் படத்திற்கு தானே தமிழில் குரல் கொடுப்பதாக அவர் எடுத்துக்கொண்ட சிரத்தை எங்களை வெகுவாக ஆச்சர்யப்படுத்தியது. அதிலும் பழங்காலத் தமிழ் மொழியின் உச்சரிப்பை, தன் குரலில் தமிழ் ரசிகர்களுக்காக பலமுறை ரிகர்சல் செய்து டப்பிங் செய்துள்ளார்.

    தமிழ் வசனங்களை எழுதி, டப்பிங் பணிகளிலும் பேருதவியாய் இருந்த இயக்குநர் ராமுக்கு பெரும் நன்றி. மாமாங்கம் படத்தினை ஒரே நேரத்தில் மலையாளம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளோம். தமிழ் டீஸருக்கு கிடைத்த வரவேற்பு எங்களை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    எந்த மொழியிலும் நல்ல கருத்துக்களை, நல்ல படங்களை ஆதரிப்பதில் தமிழ் ரசிகர்கள் எப்போதும் முன்னோடிகள் அவர்களது அன்பு இதன் மூலம் மீண்டும் உறுதியாகியுள்ளது. 1680ஆம் ஆண்டுகளின் காலகட்டப் பின்னணியில் 12 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வரும் புகழ்பெற்ற மாமாங்கம் திருவிழாவை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது என்றார்.

    இந்தப்பின்னணியில் ராஜா ஜாமோரின் எனும் மன்னனின் அடக்குமுறைக்கு எதிராக போராடிய சாவேர்ஸ் எனும் ஒரு சிறு போராட்ட குழுவை மையமாக கொண்டது தான் மாமாங்கம் திரைப்படம். அக்குழுவில் அதுவரை எவராலும் சாதிக்க முடியாததை சாதித்த உண்மையான ஹீரோ, முடியாததை முடித்துக்காட்டிய வரலாற்றில் மறைக்கப்பட்ட மிகப்பெரும் போர் வீரனின் கதையை, அவனின் வெற்றியை பெரும் பட்ஜெட்டில் சொல்லும் பிரமாண்ட படைப்பாக இப்படம் இருக்கும்.

    மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் இப்படத்தில் மலையாள உச்ச நட்சத்திரங்களான உன்னி முகுந்தன், சித்திக், மணிக்குட்டன், மணிகண்டன் ஆச்சாரி, தருண் அரோரா, பிரச்சி தெஹ்லான், கனிகா, அனு சித்தாரா, இனியா ஆகியோருடன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

    எம்.பத்மகுமார் இயக்கியிருக்கும் இப்படத்தினை காவ்யா ஃபிலிம் கம்பெனி சார்பில் வேணு குன்னபில்லி தயாரிக்கிறார். இப்படத்தின் தமிழ் வசனங்களை இயக்குநர் ராம் எழுதுகிறார். மலையாளத்தில் வசனம் மற்றும் திரைக்கதையை ஷங்கர் ராமகிருஷ்ணன் எழுதுகிறார்.

    இப்படத்தின் ஒளிப்பதிவு பணியை மனோஜ் பிள்ளை மேற்கொள்கிறார், சண்டைப் பயிற்சியை ஷாம் கவுஷல் கவனித்துக்கொள்கிறார். படத்தொகுப்பு வேலையை ராஜா முகம்மது, இசையமைப்பு பணியை எம்.ஜெயச்சந்திரன் மேற்கொள்கின்றனர்.

    மலையாள முன்னணி நடிகர்கள் அனைவரும் அவர்களின் மொழிப்பற்றையும் வரலாறையும் இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்வதற்காக, அதிக சிரத்தை எடுத்து வரலாற்றுப் படங்களில் நடிக்கின்றனர். ஆனால் நம் தமிழ் சினிமா நடிகர்கள் தமிழ் வாழ்க தமிழ் வாழ்க என்று சொல்லிக்கொண்டு தங்களின் பாக்கெட்டை நிரப்புவதிலேயே குறியாக இருக்கின்றனர் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

    English summary
    Mammootty is starring in the historical film 'Mamangam' which tells the story of a war hero. The film is set in the context of the famous Mamangam festival, which takes place every 12 years in the context of the period of the 1680s.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X