twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மசூதியில் செல்ஃபி எடுக்க வந்த ரசிகர்கள்: குணமா வாயில சொல்லிய மம்மூட்டி

    By Siva
    |

    திருவனந்தபுரம்: செல்ஃபி எடுக்க வந்த ரசிகர்களிடம் குணமா வாயில சொல்லி புரிய வைத்திருக்கிறார் நடிகர் மம்மூட்டி.

    பிரபலங்களை பார்த்தால் ஆட்டோகிராப் வாங்கும் காலம் மலையேறிவிட்டது. ஆளாளுக்கு செல்போன் வைத்திருப்பதால் பிரபலங்களை பார்த்தவுடன் செல்ஃபி எடுக்கத் துடிக்கிறார்கள் ரசிகர்கள்.

    இந்நிலையில் நடிகர் மம்மூட்டியுடன் ரசிகர்கள் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர்.

    தொழுகை

    தொழுகை

    காலித் ரஹ்மான் இயக்கி வரும் மலையாள படத்தில் நடித்து வருகிறார் மம்மூட்டி. படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு அருகில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை மதியம் ஜும்மா தொழ காரில் வந்துள்ளார் மம்மூட்டி.

    மம்மூட்டி

    மம்மூட்டி

    மம்மூட்டி காரில் இருந்து இறங்கி வந்ததை பார்த்த ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுக்க ஓடி வந்தனர். வழிபாட்டுத்தலங்களுக்கு வந்தால் பிரார்த்தனை செய்ய வேண்டும். புனிதமான இடத்தில் செல்ஃபி எடுக்க வேண்டாமே என்று அவர் தனது ரசிகர்களுக்கு குணமாக வாயில் சொல்லி புரிய வைத்துள்ளார்.

    தொழுகை

    தொழுகை

    மம்மூட்டி சொல்வது சரி தான் என்பதை புரிந்து கொண்ட ரசிகர்கள் அவருக்கு வழிவிட்டுள்ளனர். இதையடுத்து அவர் மசூதியில் நிம்மதியாக தொழுதுவிட்டு படப்பிடிப்பு தளத்திற்கு திரும்பிச் சென்றுள்ளார். முன்னதாக அஜித் குமாரும் தனது மகளின் பள்ளிக்கு சென்ற இடத்தில் செல்ஃபி கேட்டவரிடம் குணமாக சொல்லி புரிய வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிவகுமார்

    சிவகுமார்

    முன்னதாக மதுரையில் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை நடிகர் சிவகுமார் தட்டிவிட்டார். பின்னர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த அவர் ரூ. 21 ஆயிரம் மதிப்புள்ள புது செல்போனை அந்த ரசிகருக்கு அளித்தார். பிரபலங்களுடன் செல்ஃபி எடுக்க ஆசைப்படுவது தவறு அல்ல. அவர்களிடம் அனுமதி கேட்பது நல்லது.

    English summary
    Mammootty has advised his fans who came to take selfie with him in a mosque.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X