சுரேஷ் கோபி மகள் திருமணம்.. மம்மூட்டி, மோகன்லாலை எப்படி சோதனை செய்றாங்க பாருங்க!

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள குருவாயூர் திருக்கோயிலில் இன்று காலை 8.45 மணிக்கு பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் மகள் பாக்யா சுரேஷ் திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. அந்த திருமண விழாவில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

திருமண விழாவுக்கு வருகை தந்த பிரபலங்களை செக்யூரிட்டி காரணமாக சோதனை செய்த வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.

Mammootty and Mohanlal undergoes security check at Suresh Gopi daughter wedding video goes trending

பாக்யா சுரேஷ் திருமணம்: மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் சுரேஷ் கோபியின் மகள் பாக்யா சுரேஷ் திருமணம் இன்று காலை குருவாயூர் கோயிலில் கோலாகலமாக நடைபெற்றது. பிரம்மாண்ட திருமண மண்டபம் எல்லாம் பிடித்து ஆடம்பர செலவு செய்து திருமணத்தை நடத்தாமல், இறைவன் குருவாயூரப்பன் சன்னதியில் தனது மகளின் திருமணத்தை சுரேஷ் கோபி நடத்தியுள்ளார்.

Mammootty and Mohanlal undergoes security check at Suresh Gopi daughter wedding video goes trending

மோடி ஆசிர்வாதம்: இந்த திருமண விழாவுக்கு பிரதமர் மோடி நேரில் வந்து ஆசிர்வாதம் செய்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. மேலும், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தென்னிந்திய திரை பிரபலங்கள் என பலரும் சுரேஷ் கோபி மகள் திருமணத்தில் கலந்து கொண்ட காட்சிகள் வெளியாகி உள்ளன.

Mammootty and Mohanlal undergoes security check at Suresh Gopi daughter wedding video goes trending

மம்மூட்டி முதல் குஷ்பு வரை: சுரேஷ் கோபி பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் அவர்களுடன் இணைந்தும் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சுரேஷ் கோபி மகள் திருமணத்தில் கலந்து கொள்ள நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால், ஜெயராம், திலீப், நடிகை குஷ்பு உள்ளிட்ட பலர் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை ஆசிர்வதித்தனர்.

Mammootty and Mohanlal undergoes security check at Suresh Gopi daughter wedding video goes trending

மம்மூட்டி, மோகன்லாலிடம் பரிசோதனை: திருமண விழாவுக்கு பிரதமர் மோடி வருகை தந்த நிலையில், விஐபிக்களிடமும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. நடிகர் மம்மூட்டியிடம் செக்யூரிட்டி ஒருத்தர் சோதனை செய்யும் போது செம ஜாலியாக கைகளை எல்லாம் தூக்கிக் காட்டி தன்னை பரிசோதனை செய்ய அவர் சொல்லும் போது அந்த நபரே சிரித்துக் கொண்டே பரிசோதனை செய்த காட்சிகள் வெளியாகி உள்ளன. மோகன்லால் வந்து நிற்கும் போதே நீங்க போங்க சார் என்பது போல செக்யூரிட்டி நபர் கையசைத்த காட்சிகளும் தீயாக பரவி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X