Mammootty Mohanlal: மலையாளத்துல தான் இதெல்லாம் நடக்கும்... மம்மூட்டி, மோகன்லால் ட்ரெண்டிங் போட்டோ

திருவனந்தபுரம்: மம்மூட்டி, மோகன்லால் இருவரும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர்.

முக்கியமாக இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் ரஜினி, கமல் போல, மலையாளத்தில் மம்மூட்டி - மோகன்லால் நட்பை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

இந்நிலையில், மல்லுவுட் சூப்பர் ஸ்டார்ஸ்ஸான மம்முட்டி, மோகன்லால் இருவரும் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ வைரலாகி வருகிறது.

 Mammootty and Mohanlals latest photo is trending now

மம்முட்டி, மோகன்லால் லேட்டஸ்ட் போட்டோ:மலையாளத்தில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மம்முட்டி, இப்போதும் இளம் நடிகர்களுக்கு சவால் விட்டு வருகிறார். பீஸ்மா பர்வம், புழு, சிபிஐ 5, ரோர்சார்ச், நண்பகல் நேரத்து மயக்கம், கிறிஸ்டோபர் என வரிசையாக சூப்பர் ஹிட் படங்களில் நடித்து மிரள வைத்தார். அதனைத் தொடர்ந்து காதல், கன்னூர் ஸ்குவாட் ஆகிய படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

அதேபோல், மோகன்லாலும் மலையாளத்தில் முன்னணி நடிகராக மாஸ் காட்டி வருகிறார். தற்போது மலைக்கோட்டை வாலிபன், ராம் பார்ட் 1, எம்புரான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே மம்மூட்டி, மோகன்லால் இருவரும் நடிப்பில் மட்டும் இல்லாமல், நட்பிலும் முன்மாதிரியாக திகழ்ந்து வருகின்றனர். திரையுலகில் உச்சம் தொடும் முன்பில் இருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வருகின்றனர்.

தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போல மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் நட்பு பலரும் அறிந்ததே. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக படங்களில் நடிக்காத போதும், அடிக்கடி சந்தித்து வருகின்றனர். அப்போதெல்லாம் அவர்கள் எடுத்துக்கொண்ட போட்டோஸ் வைரலாகி வந்தன. அதேபோல், தற்போதும் மம்முட்டியும் மோகன்லாலும் சந்தித்து போட்டோ எடுத்துள்ளனர்.

 Mammootty and Mohanlals latest photo is trending now

வேட்டி, சட்டையுடன் மம்முட்டி முன்னால் நிற்க, அவரது பின்னால் மோகன்லால் செல்போனில் பேசியபடி சைலண்டாக போஸ் கொடுத்துள்ளார். இருவருமே செம்ம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த புகைப்படத்தை மம்முட்டி மோகன்லால் ரசிகர்கள் டிவிட்டர் உட்பட சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தில் மோகன்லால் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இதனால், மம்முட்டி மோகன்லால் போட்டோவை ரஜினி ரசிகர்களும் அதிகமாக ஷேர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல், மலையாளத்தில் தான் இப்படி சூப்பர்ஸ்டார்கள் இணைந்து போட்டோ எடுத்துக்கொள்வார்கள் எனவும் கோலிவுட் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X