Box Office: மம்மூட்டியின் சைக்கோ தனத்தை பார்க்க இரவில் குவிந்த ரசிகர்கள்.. களம் காவல் அதிகாரப்பூர்வ வசூல்!

திருவனந்தபுரம்: ஹீரோ நல்லவனா வெளிநாட்டு வேலை எல்லாம் விட்டுட்டு அஹிம்சையோடு அம்மா, அப்பா ஊர்ல இட்லி கடை வச்சு அமைதியா வாழுற படத்தை எல்லாம் எவன் பாஸ் பார்க்குறான் இப்போ, ஹீரோவே வில்லன் அவதாரம் எடுத்து கொடூரமா பெண்களை துப்பாட்டாவை போட்டு கழுத்து நெறிச்சு கொலை பண்றதை பார்க்கத்தான் கூட்டம் கூட்டமா போறாங்க..

கேங்ஸ்டர், போலீஸ்காரன் என ஹீரோக்கள் ஆக்‌ஷன் மோடுக்கு சென்றாலே அதை பார்க்க தியேட்டரில் ரசிகர்கள் படையப்பா படத்தில் வரும் படையை போல கிளம்பிவிடுகின்றனர்.

Mammootty announced Kalamkaval Official Worldwide Day 1 Box Office stuns fans
Photo Credit:

மம்மூட்டி இந்த முறை ஹீரோவாக அல்லாமல் கொடூரமான சைக்கோ கொலைகாரனாக நடித்துள்ள 'களம் காவல்' நேற்று வெளியான நிலையில், சாக்னிக் கணிப்பை எல்லாம் பொய்யாக்கும் அளவுக்கு அதிகாரப்பூர்வ வசூல் தற்போது வந்துள்ளது.

களம் காவல் உலகளவில் முதல் நாள் வசூல்: மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் ஜித்தின் கே. ஜோஸ் இயக்கத்தில் மம்மூட்டி, விநாயகன், ரஜிஷா விஜயன், மாளவிகா, முல்லை அரசி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான களம் காவல் திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளிய நிலையில், நேற்று இரவு அதிரடியாக அதிக காட்சிகள் அதிகரித்தன. இந்நிலையில், உலகம் முழுவதும் முதல் நாளில் 15.7 கோடி வசூல் வந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

என்னை உங்களுக்கு பிடிக்கவே பிடிக்காது: ப்ளீஸ் இந்த புக்கை வாங்காதீங்க என தனது புத்தகத்திற்கு தலைப்பு வைத்து நீயா நானா கோபிநாத் எழுதிய புத்தகத்தை பலரும் வாங்கி படித்ததை போல என்னை இந்த படத்தில் உங்களுக்கு பிடிக்கவே பிடிக்காது என்றும் நான் ஹீரோ இல்லை, இந்த படத்தில் கொடூரமான வில்லன் என மம்மூட்டி ஓபனாகவே அறிவித்த நிலையில், அந்த படத்தை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு தியேட்டருக்கு சென்று வருகின்றனர். லோகா படத்தை போல களம் காவல் இந்த ஆண்டு மலையாளத்தில் அடுத்த பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. 30 கோடி பட்ஜெட்டில் உருவான களம் காவல் 2 நாட்களில் போட்ட காசை தியேட்டர் வசூல் மூலமாகவே அள்ளிவிடும் என்றும் அதன் பின்னர், வரும் வசூல் எல்லாம் லாபம் தான் என்று கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X