கொரோனா.. 275 நாளுக்குப் பின் வீட்டைவிட்டு வெளியே வந்த பிரபல ஹீரோ.. கட்டன் சாயாவுடன் போஸ்!

By

கொச்சி: கொரோனா காரணமாக, பிரபல ஹீரோ 275 நாட்களுக்குப் பிறகு வீட்டை விட்டை வெளியே வந்துள்ளார்.

உலக நாடுகளை பதம் பார்த்து வந்த கொரோனா வைரஸின் தீவிரம் இந்தியாவில் சமீப காலமாக குறைந்து வருகிறது.

இந்த தொற்றுக்கு புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சரிவை சந்தித்து வருகிறது

சுகாதார அமைச்சகம்

சுகாதார அமைச்சகம்

இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 96,44,222 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,40,182 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 91,00,792 பேர் குணமடைந்துள்ளனர். இந்த தொற்றுக்கு 4,03,248 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வீட்டிலேயே இருந்தார்

வீட்டிலேயே இருந்தார்

இந்நிலையில், இந்த கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் லாக்டவுன் பிறப்பிக்கப் பட்டது. இந்தியாவில் கேரளாவில்தான் கொரோனா பாதிப்பு முதலில் அதிகமாக இருந்தது. இதனால் வீட்டுக்குள் இருக்கும்படி பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டனர். அதைக் கடைபிடித்த பிரபல ஹீரோ மம்மூட்டி, வீட்டிலேயே இருந்தார்.

275 நாளுக்குப் பிறகு

275 நாளுக்குப் பிறகு

அதற்குப் பிறகு இப்போதுதான் அவர் முதன்முறையாக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அதாவது 275 நாட்களுக்குப் பிறகு, அவர் வீட்டை விட்டு வந்துள்ளார். அவர் கடந்த மார்ச் மாதம் 5 ஆம் தேதி, த பிரீஸ்ட் படத்தை முடித்துவிட்டு தனது வீட்டுக்குச் சென்றார். அதன் பிறகு அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லையாம்.

கட்டன் சாயா

கட்டன் சாயா

இந்நிலையில், கொச்சியில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் வெளியே வந்த அவர், நேராக மெரைன் டிரைவ் சென்றார். பல பகுதிகளில் ரிலாக்ஸாக சுற்றிய அவர், பின்னர் கலூரில் உள்ள ஸ்டேடியத்துக்கு எதிரில் உள்ள கடையில் கட்டன் சாயா குடித்தார். பிறகு ஜாலியாக நண்பர்களுடன் அரட்டை அடித்துள்ளார்.

சோசியல் மீடியா

சோசியல் மீடியா

அவருடன் நடிகர் ரமேஷ் பிஷராடி, தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப், சினிமா தயாரிப்பு நிர்வாகி பாதுஷா ஆகியோரும் அவருடன் வந்தனர். அவர் அங்கு சுற்றிய புகைப்படங்களும் வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X