மம்மூட்டிக்கு இந்த வயசுல இது தேவையான்னு கேட்ட நடிகை: திட்டித் தீர்த்த ரசிகர்கள்
திருவனந்தபுரம்: மம்மூட்டியை விமர்சித்த நடிகை பார்வதியை அவரது ரசிகர்கள் திட்டித் தீர்த்துவிட்டனர்.
கேரளா சர்வதேச திரைப்பட விழா நடந்து கொண்டிருக்கிறது. விழாவில் நடிகை பார்வதி மேனன் கலந்து கொண்டு சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லாதது பற்றி பேசினார்.
அப்போது அவர் மம்மூட்டியின் படமான கசபா பற்றி பேசினார்.

மம்மூட்டி
கசபா படம் பார்த்தேன். அப்படி ஒரு பெரிய நடிகர் பெண்ணிடம் மோசமான வசனங்களை பேசியுள்ளது அதிருப்தி அளிக்கிறது. சமூகத்தின் வெளிப்பாடே சினிமா என்கிறார்கள். இது போன்ற ஹீரோவை கொண்டாடலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றார் பார்வதி.

கிண்டல்
பார்வதி பேசியதை கேட்ட மம்மூட்டி ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் திட்டியதுடன், கிண்டல் செய்தனர். மீம்ஸ் போட்டு பார்வதியை கண்டமேனிக்கு கலாய்த்தனர்.

துணிச்சல்
மம்மூட்டியின் ரசிகர்கள் தன்னை திட்டி, கலாய்ப்பதை பார்த்த பார்வதி பயப்படவில்லை. நான் சொன்னதில் தவறு எதுவும் இல்லை என்று தில்லாக கூறியுள்ளார்.

நடிகை
நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டு என்னை திட்டுபவர்கள் நன்றாக திட்டலாம். நல்லா கலாய்ங்க என்று மம்மூட்டி ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் பார்வதி.


Click it and Unblock the Notifications