Don't Miss!
- News
"கலங்கிய குட்டை".. மீன் யாருக்கு.. 25 எம்எல்ஏக்கள் வேற.. இடைத்தேர்தலில் சசிகலா?.. பிளான் இதுதானாமே
- Finance
100 பில்லியன் டாலர் இழப்பு.. அதானி குழுமம் பங்குகள் தொடர் சரிவு..!
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Technology
டிஜிட்டல் கேமராவுக்கு குட்பை! 200MP கேமரா உடன் அறிமுகமான Galaxy S23 Ultra! Galaxy S23+ எப்படி?
- Lifestyle
இரத்த அழுத்தம் & இதய நோய் ஆபத்தை ஏற்படுத்தும் உங்க இரத்த சர்க்கரை அளவை குறைக்க இந்த உணவுகள் போதுமாம்!
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விக்ரம் கமல் பாணியில் மம்முட்டி கொடுத்த சர்ப்ரைஸ்... மேடையில் துள்ளிக் குதித்த ரோர்சாக் நடிகர்!
திருவனந்தபுரம்:
மம்முட்டி
நடிப்பில்
கடந்த
அக்டோபர்
7ம்
தேதி
வெளியான
ரோர்சாக்
திரைப்படம்
பாசிட்டிவான
விமர்சனங்களைப்
பெற்றது.நிஷாம்
பஷீர்
இயக்கத்தில்
வெளியான
ரோர்சாக்
பாக்ஸ்
ஆபிஸில்
40
கோடி
ரூபாய்க்கும்
மேல்
வசூலித்துள்ளது.
இந்நிலையில்,
ரோர்சாக்
படத்தின்
வெற்றி
விழாவில்
கமல்
பாணியில்
மம்முட்டி
கொடுத்த
கிஃப்ட்
இணையத்தில்
வைரலாகி
வருகிறது.
பழிக்குப்
பழி
வாங்க
துடிக்கும்
மம்முட்டி…
ரோர்சாக்
விமர்சனம்…
ஓடிடி
ரசிகர்களுக்கு
திரில்லர்
ட்ரீட்

மம்முட்டியின் மிரட்டல் நடிப்பில் ரோர்சாக்
மலையாள சினிமாவின் மெகா ஸ்டார் மம்முட்டி வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் மம்முட்டியின் நடிப்பில் அக்டோபர் மாதம் 7ம் தேதி வெளியான ரோர்சாக், ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. நிஷாம் பஷீர் இயக்கத்தில் மம்முட்டியின் மிரட்டலான நடிப்பில் வெளியான இந்தப் படம், ஹாரர் திரில்லர் ஜானரில் வித்தியாசமாக உருவாகி இருந்தது.

ரோர்சாக் சக்சஸ் மீட்டிங்
தியேட்டர்களில் சூப்பர் ஹிட் அடித்த ரோர்சாக், ஹாட்ஸ்டாரில் வெளியாகி ஓடிடி ரசிகர்களிடமும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. மலையாளம் மட்டுமின்றி தமிழ் ரசிகர்கள் பலரும் ரோர்சாக் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், மம்முட்டி, இயக்குநர் நிஷாம் பஷீர், துல்கர் சல்மான் ஆகியோர் ரோர்சாக் படத்தின் சக்சஸ் மீட்டிங்கில் பங்கேற்றனர். இதில், இந்தப் படத்தில் பணியாற்றியவர்களுக்கு மம்முட்டி பரிசுகள் கொடுத்து பாராட்டு தெரிவித்தார்.

விக்ரம் கமல் பாணியில் கிஃப்ட்
அப்போது மேடையில் பேசிய மம்முட்டி, "ரோர்சாக் படத்தின் சூட்டிங் நடந்துகொண்டிருந்த போது கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. அதில், நடிகர் சூர்யாவுக்கு கமல்ஹாசன் ரோலக்ஸ் வாட்சு பரிசு கொடுத்திருந்தார். அதனைப் பார்த்து ரோர்சாக் படத்தில் நடித்த ஆசிப் அலியும், இந்த மாதிரி ரோலக்ஸ் வாட்ச் கிஃப்ட் கிடைக்குமா என கேட்டார். விக்ரம் சூப்பர் ஹிட்டாகி நல்ல கலெக்ஷன் கிடைச்சிருக்கு, ரோர்சாக் படமும் அதே மாதிரி ஹிட்டானா பார்க்கலாம் என சொல்லிருந்தேன். இப்போ அந்த கிஃப்ட் ஆசிப் அலிக்கு, எடு அந்த ரோலக்ஸ் வாட்ச்" எனக் கூறி, ஆசிப் அலிக்கு ரோலக்ஸ் வாட்சை கிஃப்டாக கொடுத்தார்.

மேடையில் துள்ளிக் குதித்த ஆசிப் அலி
மம்முட்டி ரோலக்ஸ் வாட்சை கிஃப்டாக கொடுத்ததை எதிர்பார்க்காத ஆசிப் அலி, மேடையிலேயே துள்ளிக் குதித்தார். இதனை அங்கிருந்த ரசிகர்கள் கை தட்டி கொண்டாடினர். விக்ரம் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக கார், ரோலக்ஸ் வாட்ச் என சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்து அசத்தினார் கமல். அவரது ஸ்டைலை பின்பற்றி ஐசரி கணேஷ் வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றிக்கு, சிம்புவுக்கு கார் பரிசளித்தார். அதேபோல்,, கார்த்தி சர்தார் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குநருக்கு கார் பரிசு கொடுத்தார். இப்போது மம்முட்டி ரோலக்ஸ் வாட்ச் பரிசாக கொடுத்துள்ளார். இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.