Mammootty - ஜெயிலர் படத்தில் மம்மூட்டி நடித்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பார்.. ட்ரெண்டாகும் புகைப்படம்

சென்னை: Mammootty (மம்மூட்டி) மம்மூட்டி நடித்திருக்கும் புதிய படத்தில் அவரது லுக் வெளியாகியிருக்கும் சூழலில் ஜெயிலர் படத்தில் மம்மூட்டியே நடித்திருக்கலாமே என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் ஜெயிலர். 2.0, தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதன் காரணமாக கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார் ரஜினி. அதேபோல் நெல்சன் திலீப்குமாரும் பீஸ்ட் படத்தின் தோல்வியால் ஜெயிலர் மூலம் கம்பேக் கொடுக்க காத்திருந்தார்.

Mammootty is the first choice to act villain role in jailer here is the that look

கம்பேக் கொடுத்த இருவர்: இப்படி எக்கச்சக்க எதிர்பார்ப்புகளோடு வெளியானது ஜெயிலர் படம். நெல்சன் திலீப்குமாரின் டார்க் காமெடி பக்காவாக ஒர்க் அவுட் ஆக; ரஜினிகாந்த்தின் மாஸும், க்ளாஸும் ரசிகர்களை கவர படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம் ரஜினிகாந்த்தும், நெல்சன் திலீப்குமாரும் தரமான கம்பேக்கை கொடுத்துவிட்டார்கள் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறினர். படம் இதுவரை 600 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. இதனையடுத்து ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார், அனிருத ஆகியோருக்கு கார்களை பரிசாக வழங்கினார் கலாநிதி மாறன்.

வர்மன்: இதற்கிடையே படத்தில் ஏகப்பட்ட விஷயங்கள் கொண்டாடப்பட்டன. அதில் ஒன்று வில்லன் கதாபாத்திரம். தமிழில் திமிரு, மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் விநாயகன் இதில் வில்லனாக நடித்திருந்தார். வர்மன் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்த அவர் மலையாளம் கலந்த தமிழில் பேசி நடிப்பில் மிரட்டி எடுத்துவிட்டார். இதனால் ரொம்ப வருடங்கள் கழித்து தமிழில் நடித்த விநாயகனுக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கிறது.

Mammootty is the first choice to act villain role in jailer here is the that look

முதல் சாய்ஸ்: இதற்கிடையே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் படத்தின் வில்லனான வர்மன் கேரக்டருக்கு முதலில் தென் இந்தியாவில் பெரிய ஸ்டாராக இருக்கும் ஒருவரிடம்தான் பேசினோம். நான் சொல்லியதால் அவரும் ஒத்துக்கொண்டார். இருந்தாலும் அவரை வில்லனாக போட்டால் அடிக்கும்படியான காட்சிகள் எல்லாம் வரும். அதை செய்ய தயக்கமாக இருக்கும்.

எனவே ஸ்க்ரிப்ட்டில் கொஞ்சம் காம்ப்ரமைஸ் செய்வது போல் இருக்குமே என எனக்கு தோன்றியது. அதேதான் நெல்சனுக்கும் தோன்றியது. பிறகு அந்த ஸ்டாரிடமே ஃபோன் செய்து விஷயத்தை சொன்னதும் சரி சார் நீங்க சொன்னா ஓகே என்று சொல்லிவிட்டார். அதன் பிறகுதான் வர்மன் கேரக்டருக்கு விநாயகனை கொண்டு வந்தோம் என்றார்.

Mammootty is the first choice to act villain role in jailer here is the that look

அது மம்மூட்டியா?: ரஜினியின் அந்தப் பேச்சை அடுத்து அவர் குறிப்பிட்டது மம்மூட்டியைத்தான் என்று பலரும் பேச ஆரம்பித்தனர். இருந்தாலும் படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக எதையும் சொல்லவில்லை. சூழல் இப்படி இருக்க மம்மூட்டி புதிய படம் ஒன்றில் நடித்திருக்கிறார். பிரம்மயுகம் என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மம்மூட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டது.

அதில் மம்மூட்டி இருக்கும் லுக்கை பார்த்த ரசிகர்கள் அப்படியே வர்மன் லுக்கில் இருக்கிறாரே. பேசாமல் இவரே ஜெயிலரில் வில்லனாக நடித்திருந்தால் படம் இன்னும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கும். மிஸ் ஆகிடுச்சு என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X