Mammootty: ‘சாரே உங்களுக்கு வயசே ஆகாதா!?’ இணையத்தை தெறிக்கவிடும் மம்முட்டியின் அடிபொளி போட்டோ ஷூட்
திருவனந்தபுரம்: மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி தற்போது பஸூக்கா, கண்ணூர் ஸ்குவாட், காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
71வது வயதான மம்முட்டி இதுவரை 420க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
இப்போதும் இளம் ஹீரோக்களுக்கு சவால் விட்டு வரும் மம்முட்டி, போட்டோ ஷூட்டிலும் கலக்குகிறார்.
பஸூக்கா படப்பிடிப்பின் போது மம்முட்டி நடத்திய போட்டோ ஷூட் இணையத்தையே அதிர வைத்துள்ளது.

மம்முட்டியின் அடிபொளி போட்டோ ஷூட்: மலையாள திரையுலகின் உச்ச நட்சத்திரமான மம்முட்டி, 71 வயதிலும் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். பீஸ்மா பர்வம், புழு, சிபிஐ 5, ரோர்சார்ச், நண்பகல் நேரத்து மயக்கம், கிறிஸ்டோபர் என ஒவ்வொரு படத்திலும் மம்முட்டியின் கேரக்டரும் நடிப்பும் இப்போதும் சிலிர்க்க வைக்கிறது. முக்கியமாக நண்பகல் நேரத்து மயக்கம் தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது காதல், கன்னூர் ஸ்குவாட், பஸூக்கா ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் மம்முட்டி. முன்னதாக ஜெயிலர் படத்தில் மம்முட்டியை நடிக்க வைக்கலாம் என நெல்சன் விருப்பம் தெரிவித்திருந்தாராம். அதாவது ரஜினிக்கு வில்லனாக மம்முட்டியை நடிக்க வைக்க வேண்டும் என்பதே அவரது ஆசையாக இருந்துள்ளது. ஆனால், தளபதி படத்தில் ரஜினிக்கு நண்பனாக நடித்திருந்தார் மம்முட்டி.
அதனால், நண்பனாக நடித்த மம்முட்டி ஜெயிலரில் வில்லனாக வந்தால் நன்றாக இருக்காது என ரஜினி நோ சொல்லிவிட்டாராம். மேலும், சண்டைக் காட்சிகளில் மம்முட்டியுடன் மோதினால் ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என ரஜினி மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. காரணம் தளபதி படத்தில் தேவராஜ் கேரக்டரில் மம்முட்டியும், சூர்யாவாக ரஜினியும் ரியல் நண்பர்களாகவே நடித்திருந்தனர்.

இந்நிலையில், பஸூக்கா படத்தின் ஷூட்டிங்கின் போது மம்முட்டி எடுத்துக்கொண்ட போட்டோஸ் இணையத்தை கலங்கடித்து வருகிறது. 'Observing and Absorbing' என்ற கேப்ஷனுடன் இரண்டு போட்டோக்களை மம்முட்டி ஷேர் செய்துள்ளார். இதில் ரெட்ரோ ஸ்டைல் காஸ்ட்யூம் அணிந்தபடி, இளம் ஹீரோக்களுக்கே டஃப் கொடுத்துள்ளார் மம்முட்டி. முக்கியமாக மம்முட்டியின் போட்டோவை பார்த்த ரசிகர்கள், அவருக்கு 71 வயது என்பதை நம்பவே முடியவில்லை என கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர்.
இரு தினங்களுக்கு முன்னர் மம்முட்டி, மோகன்லால் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோவும் இதேபோல் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சில மாதங்களுக்கு முன்னர் டாம் க்ரூஸின் போட்டோவை ஹாலிவுட் ரசிகர்கள் ட்ரெண்டாக்கிய போதும், அதற்கு மம்முட்டியின் க்யூட்டான புகைப்படங்களை இந்திய ரசிகர்கள் வைரலாக்கியதும் முக்கியமானது.


Click it and Unblock the Notifications











