மோகன்லால் மம்முட்டி கேன்டிட் புகைப்படம் வைரல்!
கொச்சி : மலையாள திரைத்துறையில் இரண்டு மிகப்பெரிய நட்சத்திரங்களாக இருக்கும் மம்முட்டி மற்றும் மோகன்லால் நீண்ட காலமாக நண்பர்களாக இருந்து வருவது அனைவரும் அறிந்ததே.
த்ரிஷ்யம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு த்ரிஷ்யம் பாகம்-2 உருவாகி வரும் நிலையில் அந்த திரைப்படம் அமேசான் தளத்தில் நேரடியாக வெளியிடப்படுகிறது.
நிகழ்ச்சிகளில் மட்டுமே மம்முட்டி மற்றும் மோகன்லாலை ஒன்றாக பார்த்து வர இப்பொழுது இவரும் தனியாக சந்தித்து கொண்ட கேன்டிட் புகைப்படத்தை மோகன்லால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதை அடுத்து லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.

சிறந்த நடிகர்களாக
மலையாள திரைப்படத்துறையில் ஆணிவேராக இருந்து வரும் மம்முட்டி மற்றும் மோகன்லால் என்ற இரண்டு சூப்பர் ஸ்டார் நட்சத்திரங்கள் இந்திய அளவில் பலராலும் விரும்பக்கூடிய மிகச் சிறந்த நடிகர்களாக மட்டுமல்லாமல் நண்பர்களாகவும் இருந்து வருகின்றனர்.

லூசிஃபர்
இருவரும் தங்களது ஸ்டைலில் வெவ்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தாலும், ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் பாக்ஸ் ஆபீசை தெரிக்கவிடப்பட்டு வரும் நிலையில் மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான லூசிஃபர் திரைப்படம் கிட்டத்தட்ட 250 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றதோடு, இப்பொழுது தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வருகிறது.

ஓடிடி தளத்தில் நேரடியாக
த்ரிஷ்யம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இந்தியாவில் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியான அனைத்து இடங்களிலும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற நிலையில், இப்பொழுது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வர சமீபத்தில் அதன் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.

கேன்டிட் புகைப்படத்தை
ஷைலாக் வெற்றியை தொடர்ந்து மம்முட்டி நடித்து வரும் தி ப்ரீஸ்ட் திரைப்படமும் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், இதுவரை மம்முட்டி மற்றும் மோகன்லாலை நாம் அனைவரும் பெரும்பாலும் விருது வழங்கும் விழாக்களில் மட்டுமே பார்த்து வந்த நிலையில், நீண்ட காலமாக நெருங்கிய நண்பர்களாக பழகி வரும் இவர்கள் இப்பொழுது கேஷுவலாக எடுத்துக் கொண்ட கேன்டிட் புகைப்படத்தை மோகன்லால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வித் இச்சகா
ரசிகர்கள் பலரும் மம்முட்டியை அன்பாக மம்முக்கா என அழைத்து வந்தாலும், மோகன்லால் மட்டும் இச்சகா என அழைத்து வரும் நிலையில் இருவரும் கேஷுவலாக பேசி சிரித்துக்கொண்டு உள்ள அழகிய கேன்டிட் புகைப்படத்தை இப்பொழுது மோகன்லால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித் இச்சகா என பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் இணையதளத்தில் செம வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











