Mammootty Mohanlal: மம்முட்டியின் ரியல் தளபதி... கெத்து காட்டும் மோகன்லால்... ட்ரெண்டாகும் போட்டோ

சென்னை: மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியான கண்ணூர் ஸ்குவாட், காதல் - தி கோர் படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. இதனைத் தொடர்ந்து பிரம்மநாயகம் என்ற படத்தில் நடித்து வருகிறார் மம்முட்டி. இந்நிலையில், மம்முட்டியுடன் இணைந்து மோகன்லாலும் கெத்து காட்டிய சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

மம்முட்டியுடன் ரியல் தளபதி
மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் மம்முட்டி தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான காதல் - தி கோர் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. மொழிகளை கடந்து இந்தப் படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், மம்முட்டியின் கண்ணூர் ஸ்குவாட் படமும் சூப்பர் ஹிட் அடித்தது.

 Mammootty Mohanlal: Mammootty and Mohanlals latest photo together is trending

இதுவரை 440க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மம்முட்டி. ஆனாலும், இப்போது வரை ஓய்வே இல்லாமல் பல வித்தியாசமான கதைகளில் நடித்து தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார். தற்போது பிரம்மாநாயகம் என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினி - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் தலைவர் 171 படத்திலும் மம்முட்டி நடிக்கலாம் என சொல்லப்படுகிறது.

முன்னதாக ரஜினி, மம்முட்டி காம்போ தளபதி படத்தில் மிரட்டியிருந்தது. மம்முட்டியின் தளபதியாக ரஜினி நடித்திருப்பார். மணிரத்னம் இயக்கிய இந்தப் படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இந்நிலையில் மம்முட்டி தனது ரியல் தளபதியுடன் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது. மம்முட்டியின் ரியல் தளபதி வேறு யாருமில்லை, அது மல்லுவுட் சூப்பர் ஸ்டார் மோகன்லால் தான்.

மலையாளத்தில் மம்முட்டிக்குப் பின்னர் மோகன்லாலுக்கு தான் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அதேநேரம் கோலிவுட்டில் ரஜினி, கமல் போல, மலையாளத்தில் மம்முட்டி-மோகன்லால் என்பது அனைவரும் அறிந்ததே. இருவருமே நெருங்கிய நண்பர்களாக வலம் வருகின்றனர். சினிமா நிகழ்ச்சிகள் முதல் எங்குப் பார்த்தாலும் இருவரும் இணை பிரியாமல் நெருங்கி பழகுவது இளம் தலைமுறை நடிகர்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது.

இந்நிலையில், மம்முட்டியும் மோகன்லாலும் இணைந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ட்ரெண்டாகி வருகிறது. இந்த போட்டோவில் மம்முட்டியும் மோகன்லாலும் செம்ம க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளனர். இதனை வைரலாக்கி வரும் மல்லுவுட் ரசிகர்கள், சீக்கிரமே இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மம்முட்டியை போல மோகன்லாலும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அவரது நடிப்பில் நேரு, மலைக்கோட்டை வாலிபன் படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன. அதேபோல் பிருத்விராஜ் இயக்கும் L2 எம்புரான் என்ற லூசிபர் படத்தின் இரண்டாம் பாகத்திலும் மோகன்லால் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X