மம்முட்டியின் சிபிஐ5 தி ப்ரெயின் படத்தின் புதிய போஸ்டர்... படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

திருவனந்தபுரம் : நடிகர் மம்முட்டியின் சிபிஐயின் டைரிக்குறிப்பு படம் கடந்த 1988ல் கே மது இயக்கத்தில் வெளியாகி சூப்பர் வெற்றியை பெற்றது. தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் வெளியான நிலையில் தற்போது சிபிஐ5 தி ப்ரெயின் படம் உருவாகி வருகிறது. முந்தைய படங்களின் வெற்றி, இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

நடிகர் மம்முட்டி

நடிகர் மம்முட்டி

நடிகர் மம்முட்டி மலையாளத்தின் முன்னணி நடிகராக உள்ளார். இவர் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

சிபிஐயின் டைரிக்குறிப்பு படம்

சிபிஐயின் டைரிக்குறிப்பு படம்

கடந்த 1988ல் மம்முட்டி நடிப்பில் சிபிஐயின் டைரிக்குறிப்பு படம் இவரது நடிப்பில் வெளியான முதல் சிபிஐ சீரிஸ் படம். இந்தப் படத்தை கே மது இயக்கியிருந்தார். எஸ்என் ஸ்வாமி எழுத்தில் வெளியான இந்தப் படம் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றது. தொடர்ந்து, இந்த வெற்றிக் கூட்டணி, ஜாக்ரதா, சேதுராமய்யர் சிபிஐ, நேரரியன் சிபிஐ என நான்கு முறை இணைந்து வெற்றிப் படங்களை கொடுத்துள்ளது.

குற்றங்களை ஆராயும் சேதுராமய்யர்

குற்றங்களை ஆராயும் சேதுராமய்யர்

சிபிஐ சேதுராமய்யர் குற்றங்களை ஆராய்ந்து அதை தீர்ப்பதே இந்தப் படத்தின் கதைக்களம். கதைக்களம் ஒன்றாக இருந்தாலும் அதன் திரைக்கதை ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளானது. இந்தப் படங்களுக்கு ஷ்யாம் இசையமைத்திருந்தார். இந்தக் கூட்டணி தற்போது 5வது முறையாக மீண்டும் இணைந்துள்ளது.

5வது பாகம்

5வது பாகம்

அதேபோல என்எஸ் ஸ்வாமி எழுத்தில் கே மது படத்தை இயக்கி வருகிறார். கடந்த 4 படங்களை போல இல்லாமல் இந்தப் படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்து வருகிறார். படத்தில் ரஞ்சி பணிக்கர், அனூப் மேனன், சாய் குமார், மாளவிகா மேனன், மாளவிகா நாயர், ஸ்வாசிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் புதிய போஸ்டர்

படத்தின் புதிய போஸ்டர்

ஸ்வர்கசித்ரா நிறுவனம் மூலம் அப்பச்சன் படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் போஸ்டர் ஒன்றை மம்முட்டி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கைகளை பின்பக்கம் கட்டியபடி அவர் இந்த போஸ்டரில் காணப்படுகிறார். இதையடுத்து முந்தைய சிபிஐ படங்களின் போஸ்டர்களை ரசிகர்கள் ஒப்பிட்டு வருகின்றனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X