நாமதான் பர்ஸ்ட்... டாப் 10 லிஸ்டில் முதலிடம் பிடித்த தமிழ்ப் படம்
மும்பை: திரைப்பட இணையதளமான ஐஎம்டிபி வெளியிட்டுள்ள, இந்தாண்டுக்கான சிறந்த படங்களில் பட்டியலில், தமிழ் மொழிப் படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
பிரபல திரைப்பட இணையதளமான ஐஎம்டிபி, ஒவ்வொரு வருடமும் சிறந்த 10 திரைப்படங்களை ரசிகர்களின் வாக்குகள் மூலம் தேர்வு செய்து வெளியிடுவது வழக்கம்.
அதன்படி 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 இந்திய படங்களை அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது. அதில் மம்மூட்டி நடித்த பேரன்பு படம் முதலிடத்தை பிடித்துள்ளது.

ராம்
இந்தப் படத்தை ஸ்ரீ இராஜலட்சுமி ஃபிலிம்ஸ் சார்பில் பி.எல்.தேனப்பன் தயாரித்திருந்தார். அஞ்சலி, சாதனா, அஞ்சலி அமீர், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்திருந்தனர். ராம் இயக்கி இருந்தார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்த இந்த படத்துக்கு, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

உரி
இரண்டாவது இடத்தை, 2016 ஆம் ஆண்டு நடந்த உரி தாக்குதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட, உரி படம் பெற்றுள்ளது. ஆதித்யா தர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விக்கி கவுசல், யாமி கவுதம், பரேஷ் ராவல் உட்பட பலர் நடித்திருந்தனர்.

கல்லி பாய்
இந்தியாவில் இருந்து ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்லிபாய் படம் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. ஸோயா அக்தர் இயக்கிய இந்தப் படத்தில் ரன்வீர் சிங், ஆலியா பட் நடித்திருந்த இந்தப் படத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆர்டிகிள் 15
நான்காவது இடத்தை, ஆயுஷ்மன் குரானா நடித்த ஆர்டிகிள் 15 படம் பிடித்துள்ளது. அனுபவ் சின்கா இயக்கிய இந்தப் படத்தில் நாசர், மனோஜ் பாவா, இஷா தல்வார் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த படம் தமிழில் ரீமேக் ஆக இருக்கிறது.
இதன் அடுத்த இடத்தில் சிக்கோர் என்ற படமும் 10 வது இடத்தில் மலையாள படமான லூசிபரும் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











