For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ப்ருத்விராஜ் மனைவியுடன் செல்ஃபி எடுத்த மம்முட்டி...வைரலாகும் ஃபோட்டோ

    |

    எர்ணாகுளம் : மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால், முதல் முறையாக டைரக்ட் செய்யும் பெரிய பட்ஜெட் படம் பர்ரோஸ். இந்த படத்தின் துவக்க விழா பூஜையுடன், சமீபத்தில் எர்ணாகுளத்தில் துவங்கப்பட்டது.

    காஞ்சனா 3 பட நடிகைக்கு கொரோன உறுதி.. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்! காஞ்சனா 3 பட நடிகைக்கு கொரோன உறுதி.. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்!

    பிரம்மாண்ட விழாவாக நடத்தப்பட்ட இந்த படத்தின் துவக்க விழாவில் மலையாள நடிகர், நடிகைகள், டைரக்டர்கள் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இந்த விழாவை ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்யவும் மோகன்லால் ஏற்பாடு செய்திருந்தார்.

    வைரலாகும் செல்ஃபி

    வைரலாகும் செல்ஃபி

    இந்த விழா தொடர்பான பல ஃபோட்டோக்கள் சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. இதில் பலரது கவனத்தையும் கவர்ந்த ஒரு ஃபோட்டோ தான், ப்ருத்விராஜின் மனைவியும் தயாரிப்பாளருமான சுப்ரியா மேனனுடன் மம்முட்டி எடுத்துக் கொண்ட செல்ஃபி.

    விலைமதிப்பிலாத செல்ஃபி

    விலைமதிப்பிலாத செல்ஃபி

    இந்த ஃபோட்டோவை சுப்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததும், இது இணையத்தில் வைரலாக துவங்கி விட்டது. அந்த ஃபோட்டோவுடன், ஹார்ட் எமோஜியுடன், விலை மதிப்பில்லாத செல்ஃபி என சுப்ரியா குறிப்பிட்டிருந்தார்.

     ரசிகர்களும் ஏற்றுக் கொண்ட கருத்து

    ரசிகர்களும் ஏற்றுக் கொண்ட கருத்து

    மம்முட்டியின் ரசிகர்களும் இதற்கு, ஆமாம் இது விலைமதிப்பில்லாத செல்ஃபி தான் என ஆதரவு கருத்துக்களை பதிவிட துவங்கி விட்டனர். மம்முட்டியின் மகனும் நடிகருமான துல்கர் சல்மானும் இதற்கு கருத்து பதிவிட்டிருந்தார்.

    செல்ஃபியுடன் வைரலாகும் மீம்கள்

    செல்ஃபியுடன் வைரலாகும் மீம்கள்

    இந்த செல்ஃபி வைரலானவுடன் இதை வைத்து பலரும் மீம்ஸ் போட துவங்கி விட்டனர். சுப்ரியா, மம்முட்டியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டிருப்பதை ப்ருத்விராஜ் தூரத்தில் இருந்து முறைத்து பார்ப்பது போன்ற மீம்ஸ்களும் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.

    English summary
    One picture that has grabbed the eyeballs of many is Mammootty's selfie with actor Prithviraj's wife Supriya Menon.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X