அடக்கடவுளே 6 மாசத்திலேயே அடுத்தடுத்து 2 பேர் உயிரிழப்பு.. மீளமுடியாத வேதனையில் மம்மூட்டி

திருவனந்தபுரம்: மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்மூட்டியின் வீட்டில் மீண்டும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

72 வயதாகும் நடிகர் மம்மூட்டி இந்த வயதிலும் தனது மகன் துல்கர் சல்மானுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மம்மூட்டியின் தாயார் காலமானார். இந்நிலையில், தற்போது மம்மூட்டியின் சகோதரி அமீனாவும் உயிரிழந்தது நடிகர் மம்மூட்டியை மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Mammootty Sister Ameena passes away due to ill health

மம்மூட்டியின் சகோதரி காலமானார்: மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்மூட்டியின் இளைய சகோதரி அமீனா இன்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது பெரும் துயரை ஏற்படுத்தி உள்ளது. 70 வயதான அமீனா சில காலமாகவே உடல்நலக்குறை காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்து விட்டது.

அடுத்தடுத்து சோகம்: கடந்த ஏப்ரல் மாதம் தான் நடிகர் மம்மூட்டியின் தாயார் வயது மூப்புக் காரணமாக காலமானார். இந்நிலையில், மம்மூட்டியின் தங்கை அமீனா உடல்நலக்குறைவால் காலமானது மம்மூட்டி மற்றும் துல்கர் சல்மானை மிகுந்த மன வேதனையில் ஆழ்த்தி உள்ளது. அமீனாவின் கணவர் ஏற்கனவே காலமான நிலையில், குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த அமீனா உயிரிழந்துள்ளார். அவரது இறுதிச்சடங்கு செப்டம்பர் 13ம் தேதி நாளை நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Mammootty Sister Ameena passes away due to ill health

பிரபலங்கள் இரங்கல்: மலையாள திரையுலக பிரபலங்கள் மற்றும் மம்மூட்டியின் சினிமா நண்பர்கள் என பலரும் இறப்பு செய்தி அறிந்து சோகத்தில் ஆழ்ந்திருக்கும் நடிகர் மம்மூட்டிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

நடிகர் மம்மூட்டி, ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் காதல் படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. கண்ணூர் ஸ்குவாட், பஸூகா உள்ளிட்ட படங்களை முடித்துள்ள மம்மூட்டி அடுத்ததாக பிரம்மயுகம் எனும் படத்தில் மிரட்டலான தோற்றத்தில் நடிக்க ரெடியாகி உள்ளார். சமீபத்தில் வெளியான அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஒட்டுமொத்த திரையுலகத்தையே வியப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X