Mammootty - அம்பேத்கராக நடித்தபோது நடந்த விஷயம்.. நெகிழ்ந்துபோன மம்மூட்டி.. ஆச்சரிய தகவல் உள்ளே
சென்னை: Mammootty (மம்மூட்டி) அம்பேத்கர் படத்தில் நடித்தபோது தனக்கு நேர்ந்த விஷயம் குறித்து மம்மூட்டி பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
முகம்மது குட்டி பனம்பரிம்பில் இஸ்மாயில் என்ற இயற்பெயரை கொண்டவர் மம்மூட்டி. கேரள மாநிலம் கொச்சியில் கடந்த 1951ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி பிறந்தார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மம்மூட்டி அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் அவருக்கு கலை மீது தீராத ஆர்வம் இருந்தது. இதன் காரணமாக சினிமாவில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என ஆர்வத்தோடு இருந்தார்.
சினிமாவில் என்ட்ரி: அதன்படி 1971ஆம் ஆண்டு வெளியான அனுபவங்கள் பாளிசிக்கல் என்ற படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் டீசண்ட்டான வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து சில படங்களில் நடித்துவந்த அவருக்கு 1976ஆம் ஆண்டு எம்.டி.வாசுதேவன் நாயரின் அறிமுகம் கிடைக்க அவரது வாசுதேவனின் இயக்கத்தில் தேவலோகம் படத்தில் நடித்தார். 1979ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் மம்மூட்டிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட்டாக முன்னணி ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றார்.

தமிழில் மம்மூட்டி: மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக இருந்தாலும் தமிழிலும் நடித்திருக்கிறார். 1990ஆம் ஆண்டு வெளியான மௌனம் சம்மதம் மற்றும் 1991ஆம் ஆண்டு வெளியான அழகன் படத்தில் நடித்த மம்மூட்டிக்கு தமிழில் மெகா ஹிட் படமாக அமைந்தது ரஜினியுடன் இணைந்து நடித்த தளபதி. அந்தப் படத்தில் தேவா என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்த மம்மூட்டி நட்புக்கு இலக்கணமாக இருக்கும் ஒருவர் எப்படி இருப்பாரோ அப்படியும்; ஒரு பெரிய டான் எவ்வளவு பக்குவமாக இருப்பாரோ அப்படியும் நடித்து அதகளப்படுத்தியிருந்தார். அதேபோல் தமிழில் அவர் நடித்த மறுமலர்ச்சி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம் உள்ளிட்ட படங்களும் வரவேற்பை பெற்றன..
விருதுகளை குவித்த மம்மூட்டி: மம்மூட்டி ஏராளமான கேரள மாநில அரசின் விருதுகளை பெற்றிருக்கிறார். அதேபோல் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஐந்து முறையும் பெற்றிருக்கிறார்.அந்த ஐந்து விருதுகளில் அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றில் நடித்ததற்காக ஒரு முறை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெகிழ்ந்த மம்மூட்டி: அவரது திரை வாழ்க்கையில் அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தது முக்கியத்துவம் வாய்ந்த படமாக கருதப்படுகிறது. இநிலையில் அந்தப் படத்தில் நடித்தது குறித்து மம்மூட்டி பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அதுகுறித்து பேசிய அவர், "அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று படத்தின் ஒரு ஷெட்யூல் புனே யுனிவர்சிட்டியில் நடந்தது.
அப்போது ஷாட்டுக்கு இடையே அம்பேத்கர் வேடத்தில் இருந்த எனது காலில் சிலர் விழுந்தார்கள். நான் முதலில் மம்மூட்டிக்கு இப்படியும் ரசிகர்கள் இருக்கிறார்களா என நினைத்தேன். பிறகுதான் புரிந்தது அவர்கள் மம்மூட்டியின் கால்களில் விழவில்லை. அம்பேத்கர் காலில் விழுந்தார்கள் என்று. அது எனக்கு அவ்வளவு நெகிழ்ச்சியாக இருந்தது. அம்பேத்கருக்கு அழிவு கிடையாது" என்றார்.


Click it and Unblock the Notifications











